ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு துணை- மோடி

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Last Updated : Jan 19, 2017, 12:23 PM IST
ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு துணை- மோடி  title=

டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ளது. அலங்கநால்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் சென்னை மெரினா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி மைதானம். பாளையங்கோட்டை மைதானம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பல நாட்களாக தொடருகிறது.

டெல்லி சென்ற முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
 
3-வது நாளாக இன்றும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களின் எழுச்சி காரணமாக முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார்.
 
தொடர்ந்து அவர் நேற்று இரவு அவர் டெல்லி புறப்பட்டுச்சென்றார். முதல்வருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் உடன் சென்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் அப்போது:-

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிப்பதாகவும், ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு பாரட்டத்தக்கது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். 

தமிழகத்தின் வறட்சி குறித்து விரைவில் நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Jallikattu: The Centre would be supportive of steps taken by the State Government

 

 

Trending News