ஜல்லிக்கட்டு சர்ச்சை: பிரதமருடன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு

Last Updated : Jan 19, 2017, 11:18 AM IST
ஜல்லிக்கட்டு சர்ச்சை: பிரதமருடன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு title=

டெல்லி சென்ற முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
 
3-வது நாளாக இன்றும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களின் எழுச்சி காரணமாக முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார்.
 
தொடர்ந்து அவர் நேற்று இரவு அவர் டெல்லி புறப்பட்டுச்சென்றார். முதல்வருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் உடன் சென்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெல்லியில் உள்ள தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் பன்னீர் செல்வம், லோக் கல்யாண் மார்க்கில் உள்ள வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 

Trending News