கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த ஊழியர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் தினேஷ் குமார் (28). தினேஷ் குமாருக்கு, சில தினங்களுக்கு முன் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
கடந்த 3 தினங்களாக அலுவலகம் செல்லாமல் விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முற்றத்தில் அவர் துணியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 8 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட கார்களில் அதிகாரிகள் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அப்போது சில ஆவணங்கள் திருடு போனதாக செய்திகள் வெளியாகியிருந்ன.
இந்நிலையில் கொடநாடு பங்களா தொடர்பான சர்ச்சைகள் அடங்குவதற்குள் தற்போது எஸ்டேட் பங்களாவில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.