கால்வானில் நடந்த துரோகத்திற்குப் பிறகு, சீனர்களின் எந்த ஒரு பேச்சையும் உறுதியையும் நம்ப இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
இந்தியா தனது அதிரடி நடவடிக்கைகளால், சீனாவின் தந்திர சதி நடவடிக்கைகளை முறியடித்து, எல்லையில் வலுவான நிலையில் உள்ளது. ராணுவ ரீதியிலான முக்கிய மலை பகுதிகளை இந்தியா தொடர்ந்து கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளது.
லடாக் எல்லையில் ரெஜாங் லா (Rejang La) சிகரத்திற்கு அருகில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.
இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், எச்சரித்ததாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
லடாக்கில் வீர மரணம் அடைந்த திபெத் வீரரில் இறுதி சடங்கில் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் கலந்து கொண்டு, இந்தியா சீனாவிற்கு உறுதியான செய்தியை கொடுத்துள்ளது.
சீன எல்லைப் பகுதியான LAC-யில் சீனா செய்யும் அனைத்து சதிகளையும் முறியடிக்கும் திறன் இந்திய ஆயுதப்படைகளுக்கு உள்ளது என்று பாதுகாப்பு தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் பிபின் ராவத் வியாழக்கிழமை தெரிவித்தார்.
லடாக் (Ladakh) செக்டாரில் சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாங்காங் த்சோவின் (Pangong Tso) தென் பகுதியில் சீன மேற்கொண்ட அத்துமீறலை முறியடித்து, இந்தியா மிக உயரமான முக்கிய பகுதிகளை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது.
இந்திய இராணுவம் பேச்சு வார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது என்றாலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பை சீர் குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்து கொள்ளப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.