உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் உலக அளவில் பிரபலமானது. இந்தியர மட்டும் அல்லாமல் உலக முழுவதிலும் சுற்றுளா பயணிகள் வந்து தாஜ்மகாலினை பார்வையிட்டு வருகின்றனர்.
தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இந்தியாவிற்கு 2017-ம் ஆண்டில் சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, முதல் முறையாக 1 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் செங்கன்னூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் அல்போன்ஸ் கூறியதாவது, இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம், நாட்டிற்கு 1,80,000 கோடி வருமானமாக கிடைத்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இரவு நேர சுற்றுலா திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்கு 6.88 சதவீதமாக உள்ளது. இத்துறையின் மூலம், 12.36 சதவீத மக்கள் வேலைவாய்ப்பை பெறுவதாக அவர் மேலும் கூறினார்.