ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் இன்று வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இதற்க்கு முன்னதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.
ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில், அதிமுக சார்பாக டிடிவி.தினகரன், திமுக சார்பாக மருதுகணேஷ், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன், தீபா பேரவை சார்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜக சார்பாக கங்கை அமரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தீபா பேரவை சார்பாக ஜெ.தீபா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். ஓ.பி.எஸ். அணி சார்பாக ஆர்.கே.நகரில் போட்டியிடும் மதுசூதனன், அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பா.ஜ., சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
நாளை வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.