ஒரு நாட்டில் தண்ணீரை விட பெட்ரோல் மலிவாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் என்று நினைத்து மகிழ்ச்சியடைவதற்குள், சார்க் (SAARC) நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகம் என்பது வருத்தமாகத் தான் இருக்கும்.
கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க ஒரு பிராந்திய மூலோபாயத்தை வகுக்க பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் மார்ச் 15 அன்று வீடியோ மாநாட்டை நடத்தினர்.
கொடிய கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக "தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பீதியடைய தேவையில்லை" என்றும் மற்ற சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்ட பகுதி இதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தாஜ் மஹாலில் உள்ள முக்கிய கல்லறை பார்க்க விரும்பும் நபர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள கூடுதல் டிக்கெட் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை 253 கோடி ரூபாய் செலவில் இந்தியாவே தயாரித்துள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்ளும் வாய்ப்பு மிகக்குறைவு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜெட்லி கலந்து கொள்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும் ராஜ்நாத்திற்கு பாகிஸ்தானில் அளிக்கப்ப்டட வரவேற்பில் மத்திய அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
சார்க் நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராஜ்நாத் சிங்கை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அதேவேளையில், ராஜ்நாத் வருகைக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.