Navratri 2024 Concluding Day : ஒன்பது நாட்களாக அன்னையை ஆராதித்து ஆடிப்பாடி தொழுது, பூஜித்து இன்றுடன் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை செய்துவிட்டோம். நாளை விஜயதசமியுடன் நவராத்திரியின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும்...
Saraswati Pooja 2024: நவராத்திரியின் 9 ஆவது நாளில், கல்வி மற்றும் கலைகளின் அன்னையான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தகம், நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் செய்யப்பட்டு அன்னை சரஸ்வதியின் அருளுக்காக அனைவரும் பிரார்த்திக்கிறார்கள்.
Saraswathi Pooja 2024: சரஸ்வதி பூஜையன்று சில மந்திரங்களை கூறினால், சரஸ்வதி அன்னை மிகுந்த மகிழ்ச்சியடைந்து, நம் அறிவாற்றலை அதிகரிப்பதோடு, பல வித கலைகளை எளிதாக கற்கும் ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் அள்ளித்தருவார்.
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை வழி நடத்தி வருகிறோம். சரஸ்வதி பூஜையன்று அலுவலகங்களிலும், வீடுகளிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கமாகும். அப்படி வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபடும் இடத்தை தூய்மைப்படுத்தி சந்தனம் தெளித்து, குங்குமம் இட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கு படைக்கப்பட பொருட்களுக்கும் சந்தனம் குங்குமம் இட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.