விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஆறு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி.CCSE-Gr(II,II-A) திருமா பயிலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேர்வுகளுக்கான அறிமுக வகுப்புகள் மற்றும் இலவசத் தேர்வுத் தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது மாணவர்கள் பங்கேற்று பயனடையுமாறு தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த தொல்.திருமாவளவன்.
ஆபாச வலைத்தளங்களை முற்றாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மைய - மாநில அரசுகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வசித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக சார்பாக சந்திரசேகர் போட்டியிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சிக்கு விரோதமாக ஆய்வு செய்து வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிராக திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் நடக்கவிருந்த சட்டநகல் எரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாறாக வரும் 16-09-2017 சனிக்கிழமையன்று "உண்ணாநிலை அறப்போராட்டம்" நடைபெறும் என தொல். திருமாவளவன், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
"முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நாளை(09-09-2017) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம்" ஆனது மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்கப்படுகிறது.
நீட் சட்டத்தைத் திரும்பபெற வலியுறுத்தி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ சட்ட நகல் எரிப்புப் போராட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்தது. இதனையடித்து மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 17-ம் தேதி மற்றும் 18-ம் தேதி ஆகிய நாட்களில் 48 மணி நேர தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பத்திரிக்கையாளரிடம் பேசிய திருமாவளவன்:-
வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற திமுக, அதிமுக இரண்டு கட்சியும் தங்களது வெற்றியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை. எல்லா தொகுதிகளிலும் பணம்
பட்டுவாடா பெரிய அளவில் நடந்துள்ளது. இங்கு ஜனநாயகம் வெல்லவில்லை பணநாயகம்தான் வென்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.