இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் வில்லன்களை பற்றிய தகவல்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ராதாரவி, மற்றோருவர் பழம்பெரும் அரசியல் தலைவர் பழ.கருப்பையா என்றும் தெரிய வந்துள்ளது. மூன்றாவது வில்லன் பெயரை கேட்டால் ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்றும், அந்த அளவுக்கு அந்த நடிகர் பிரபலமானவர் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் ராதாரவி நடிக்கின்றார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதையை தெரியாமல் வாய்விட்டு உளறியுள்ளார்.
அதில் அவர் கூறியது...!
இப்படத்தில் நான் வில்லனாகவும், அமைச்சராகவும் நடிக்கின்றேன். பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும்.
என்னை மீறி அவர் வருவார் என்பது போல் ராதாரவி பேசினார். இதைவைத்தே மக்கள் நலனுக்காக விஜய் அரசியல்வாதிகளிடம் மோதுவது தான் படத்தின் கதை என சமூக வலைத்தளத்தில் இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.
இது மட்டுமின்றி படத்தில் விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்துவது போல் காட்சியும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.