இது கி.மு., கரடி... 3500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது - பனிக்குள் ஒளிந்திருந்த அதிசயம்

சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த கரடியின் உடலை, பனிக்கடியில் இருந்து சேதராமின்றி விஞ்ஞானிகள் எடுத்து ஆய்வு செய்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2023, 02:49 PM IST
  • தற்கால நவீன கரடிக்கும், இந்த பழங்கால கரடிக்கும் டிஎன்ஏ ஒன்றாக உள்ளது.
  • இந்த கரடி கடைசியாக உண்ட உணவுகளின் எச்சங்களும் உள்ளன.
  • இந்த கரடி 2-3 வயதாக இருக்கும்போதே உயிரிழந்ததாக கண்டுபிடிப்பு.
இது கி.மு., கரடி... 3500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது - பனிக்குள் ஒளிந்திருந்த அதிசயம் title=

கிழக்கு சைபீரியாவின் உறைந்த பனியில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தற்போதுவரை அப்படியே இருக்கும் ஒரு கரடியின், ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு தீவில் மேய்ப்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர், ஒரு விஞ்ஞானிகள் குழுவால் அந்த கரடியின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

"இந்த கண்டுபிடிப்பு முற்றிலும் தனித்துவமானது. ஒரு பழங்கால பழுப்பு கரடியின் முழுமையான சடலம் இது" என்று கிழக்கு சைபீரியாவின் யாகுட்ஸ்கில் உள்ள வடகிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் லாசரேவ் மம்மத் அருங்காட்சியக ஆய்வகத்தின், ஆய்வகத் தலைவர் மாக்சிம் செப்ராசோவ் தெரிவித்தார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 4,600 கிமீ தொலைவில் உள்ள நியூ சைபீரிய தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான போல்ஷோய் லியாகோவ்ஸ்கி தீவில், பெர்மாஃப்ரோஸ்ட் பகுதியில் இருந்து 2020ஆம் ஆண்டு மேய்ப்பர்களால் பெண் கரடியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது போல்ஷோய் ஈதெரிகன் ஆற்றின் கிழக்கே காணப்பட்டதால், இதற்கு ஈதெரிகன் பழுப்பு கரடி என்று பெயரிடப்பட்டது.

மேலும் படிக்க | மனிதர்களை மிருகமாக்கும் Zombie Drug! அழுகும் தோல்... ஓட்டையாகும் கால்கள்! உஷார் மக்களே!

தீவிர வெப்பநிலை கரடியின் மென்மையான திசுக்களை 3,460 ஆண்டுகளாக பாதுகாக்க உதவியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.  அதே போல் அதன் கடைசியாக உண்ட உணவுகளின் எச்சங்களும் உள்ளன - பறவை இறகுகள் மற்றும் தாவரங்கள். கரடி 1.55 மீட்டர் (5.09 அடி) உயரம் மற்றும் சுமார் 78 கிலோ எடை கொண்டது என விவரிக்கப்படுகிறது.

பனிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட கரடியின் உடல்:

Bear

"முதன்முறையாக, மென்மையான திசுக்களைக் கொண்ட ஒரு சடலம் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது. இது உள் உறுப்புகள் குறித்து தெரிந்துகொள்ளவும், மூளையை ஆய்வு செய்யவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது" என்று செப்ராசோவ் கூறினார்.

சைபீரியாவில் உள்ள விஞ்ஞானக் குழு, அந்த கரடியின் கடினமான தோலை முழுவதுமாக அகற்றினர். மேலும், விஞ்ஞானிகள் அதன் மூளை, உள் உறுப்புகளை ஆய்வு செய்து செல்லுலார், நுண்ணுயிரியல், வைரஸ் மற்றும் மரபணு ஆய்வுகளை மேற்கொண்டனர். குழு அந்த கரடியின் உடலை கூராய்வு செய்தபோது, கரடியின் இளஞ்சிவப்பு திசு மற்றும் மஞ்சள் கொழுப்பு தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் அதன் மூளையை பிரித்தெடுப்பதற்கு முன், மண்டை எலும்பு தூசியை உறிஞ்சுவதற்கு ஒரு வாக்கம் கிளீனரைப் பயன்படுத்தி, அதன் மண்டை ஓடு வழியாகவும் வெட்டி எடுத்தார்கள்.

"ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியான யாகுடியா மற்றும் சுகோட்காவில் காணப்படும் நவீன கரடியில் இருந்து மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவில், இந்த 3,500 வருடங்கள் பழங்கால கரடி வேறுபடுவதில்லை என்று மரபணு பகுப்பாய்வு காட்டுகிறது" செப்ராசோவ் கூறினார். 

கரடிக்கு சுமார் 2-3 வயது இருக்கலாம் என்றார். அதன் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தால் அது இறந்துள்ளது. இருப்பினும், இப்போது நிலப்பரப்பில் இருந்து 50 கி.மீ., நீரினால் பிரிக்கப்பட்ட தீவில் கரடி எப்படி வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது பனிக்கட்டியைக் கடந்திருக்கலாம், நீந்திச் சென்றிருக்கலாம் அல்லது தீவு இன்னும் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். லியாகோவ்ஸ்கி தீவுகளில் உலகின் மிகப் விலைமதிப்பில்லாத பழங்காலப் பொக்கிஷங்கள் உள்ளன. இது விஞ்ஞானிகள் மற்றும் இங்குள்ள விலங்குகளை வேட்டையாடும் வியாபாரிகளை ஈர்க்கிறது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இத்தாலியின் மிதக்கும் அழகிய வெனிஸ் நகரத்தின் ‘பரிதாப’ நிலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News