Chinese SPY Balloon: சீனா அனுப்பிய உளவு பலூன்... ராணுவ தகவல்களை சேகரித்ததா... அமெரிக்காவில் பரபரப்பு!

Chinese SPY Balloon: அமெரிக்க வான்வெளியில், கடந்த பிப்ரவரி மாதம்  மூன்று பேருந்துகளின் அளவிலான சீன உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அமெரிக்காவின்  சில அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள மொன்டானாவில் உள்ள மால்ஸ்டாராம் விமானப்படை தளத்தின் மீது பறந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2023, 10:54 AM IST
  • அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றத்தை அதிகரித்துள்ள பலூன்.
  • சீனாவால் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள்.
  • அமெரிக்க வான்வெளியில் மூன்று பேருந்துகளின் அளவிலான சீன உளவு பலூன்.
Chinese SPY Balloon: சீனா அனுப்பிய உளவு பலூன்... ராணுவ தகவல்களை சேகரித்ததா...  அமெரிக்காவில் பரபரப்பு! title=

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா வான்பரப்பில் மர்மமான பலூன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில், அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன பலூன் பல முக்கிய ராணுவ தளங்களில் இருந்து உளவுத்துறையை சேகரித்து உடனடியாக பெய்ஜிங்கிற்கு அனுப்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை இந்த அதிர்ச்சித் தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க வான்வெளியில் மூன்று பேருந்துகளின் அளவிலான சீன உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது.  அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இது குறித்து கூறுகையில், இந்த பலூன் முதலில் ஜனவரி 28 அன்று அலாஸ்காவிலிருந்து அமெரிக்க வான்வெளிக்குள் நுழைந்தது என்றும், அடுத்த நான்கு நாட்களில், அமெரிக்காவின்  சில அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள மொன்டானாவில் உள்ள மால்ஸ்டாராம் விமானப்படை தளத்தின் மீது பறந்தது என கூறியுள்ளது.

சீனாவால் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள்

மூன்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி NBC நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பலூனை சீனாவால் கட்டுப்படுத்த முடிந்தது என்றும், அதனால் சேகரிக்கப்பட்ட தகவல்களை நிகழ்நேரத்தில் பெய்ஜிங்கிற்கு அனுப்ப முடியும் எனவும் கூறுப்பட்டுள்ளது. சீனாவால் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள் பெரும்பாலும் மின்னணு சமிக்ஞைகளிலிருந்து பெறப்பட்டது என்றும், இந்த பலூனில் இருந்து அனுப்பப்படும் தகவல்களை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிகள் எடுக்கவில்லை என்றால், சீனா மிகவும் முக்கியமான பகுதிகளில் இருந்து பல உளவுத் தகவல்களை சேகரித்திருக்க முடியும் என்று மூன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றத்தை அதிகரித்துள்ள பலூன் 

இந்த சம்பவம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்கனவே இருந்து வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பெய்ஜிங்கிற்கான தனது பயணத்தை பிப்ரவரியில் ஒத்திவைத்தார். பலூன் தங்கள் நாட்டிற்கு சொந்தமாந்து தான் என ஒப்பு கொண்ட சீனாம் இது  குடிமக்களுக்கான திட்டத்துடன் தொடர்புடையது என்று கூறியது.  ஆனா ல்அதன் நியமிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால் இந்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பலூன் சீனாவிலிருந்து முக்கியமாக வானிலை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது” என்றது

அமெரிக்கா சுட்டு வீழ்த்திய  பலூன் 

முன்னதாக, பிப்ரவரி 4 ஆம் தேதி, தென் கரோலினா கடற்கரையில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், "அதிபர் ஜோ பிடனின் வழிகாட்டுதலின் பேரில், தென் கரோலினா கடற்கரையில் கடல் மீது அமெரிக்க வான்வெளியில் ஒரு சீன உளவு பலூனை இன்று மதியம் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

மேலும் படிக்க | 5 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News