100 அடி உயரத்தில் தொங்கிய குழந்தை..உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்

கஜகஸ்தானில் 8-வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னலின் வழியே தவறி விழவிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றியக் காட்சி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

Written by - Chithira Rekha | Last Updated : May 16, 2022, 03:36 PM IST
  • 100 அடி உயரத்தில் தொங்கிய குழந்தை
  • உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்
  • விருது வழங்கிய கஜகஸ்தான் அரசு
100 அடி உயரத்தில் தொங்கிய குழந்தை..உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர் title=

கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 8-வது தளத்தில், இளம்பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை, குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு அவரது தாய் கடைக்குச் சென்றார்.

அப்போது அக்குழந்தை மெத்தை மற்றும் பொம்மைகளைப் பயன்படுத்தி ஜன்னலில் ஏறியபோது நிலை தடுமாறியதால், சுமார் 100 அடி உயரத்தில் ஜன்னலின் கம்பியைப் பிடித்துத் தொங்கியது. அக்குழந்தையின் வீட்டிற்கு கீழ் தளத்தில் வசிக்கும் சபித் என்ற நபர், அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தபோது, குழந்தை ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்தது அவரது வீட்டு ஜன்னலில் தெரிந்துள்ளது. 

மேலும் படிக்க | வேற்றுகிரக வாசிகளை 259 முறை பார்த்ததாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சபித் தனது உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது வீட்டு ஜன்னலில் ஏறி குழந்தையைக் காப்பாற்றினார். தனது வீட்டின் ஜன்னலில் ஏறிய சபித் குழந்தையின் காலைப் பிடித்துக் கொண்டதும், அக்குழந்தை ஜன்னலில் இருந்து தனது பிடியை விட்டது. பின்னர் குழந்தையை பத்திரமாக பிடித்துக் கொண்ட சபித், தன் வீட்டிற்குள் இருந்தவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார்.

பரபரப்பான இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய சபித்திற்கு ஆபத்து நேரத்தில் துணிவுடன் செயலாற்றியதற்கான விருதை கஜகஸ்தான் அரசு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க | இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்; வயிற்றில் பிளாஸ்டி கழிவுகளால் அதிர்ச்சி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News