இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்கள் 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பெற்று வந்துள்ளன.
இதனால் அமெரிக்காவில் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனல்ட் டிரம்ப், ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டார்.
இதன் காரணமாக மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிகபட்ச சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே ‘எச்-1 பி’ விசா வழங்கும் நிலை உருவாகி உள்ளது.
இதனால், இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களுக்கு 2016-ம் ஆண்டில் ‘எச்-1 பி’ விசாக்கள் குறைந்த அளவே அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, மொத்தம் 7 கம்பெனிகளுக்கும் சேர்ந்த 9,356 புதிய ஹெச்-1பி விசாகளுக்கு மட்டும் அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2016-ம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட 5,436 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2015-ம் ஆண்டை விட 37 சதவீதம் குறைவு ஆகும்.
இந்தியாவைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்களுக்கு ‘எச்-1 பி’ விசா 2015-ம் ஆண்டை காட்டிலும் 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது.