UK: சிக்கலில் லிஸ் ட்ரஸ்; ரிஷி சுனக்கின் பிரதமர் கனவு நிறைவேறுமா..!!

பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மற்றொரு அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 17, 2022, 03:12 PM IST
  • இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், இரண்டு மாதங்கள் கூட பதவியில் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிரான கிளர்ச்சி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
  • லிஸ் ட்ரஸ், பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், பலத்த எதிர்ப்பு நிலவுகிறது.
UK: சிக்கலில் லிஸ் ட்ரஸ்; ரிஷி சுனக்கின் பிரதமர் கனவு நிறைவேறுமா..!! title=

பிரிட்டனில் மற்றொரு அரசியல் நெருக்கடி உருவாக உள்ளது. ஏனெனில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், இரண்டு மாதங்கள் கூட பதவியில் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவருக்கு எதிராக கன்சர்வேடிவ் கட்சியில் கிளர்ச்சி வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிரான கிளர்ச்சி எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் அரசியல்வாதியான ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராகும் தனது கனவை நனவாக்க இது வழி வகுக்கும் என கூறப்படுகிறது. பதவிக்கு மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சி வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ் சுனக்கை தோற்கடித்தார். ஆனால் டிரஸ் தனது சொந்தக் கட்சியினரின் கிளர்ச்சி காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறு உள்ளவர்கள் பட்டியலில் ரிஷி சுனக்கும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!

இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு லிஸ் ட்ரஸை வெளியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்க கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரகசிய சந்திப்புகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில், ரிஷி சுனக் அடுத்த பிரிட்டன் பிரதமராக இருக்கும் மிகவும் பிரபலமான வேட்பாளர்களில் ஒருவர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் பிரதமராகவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிரான கிளர்ச்சி இந்த வார இறுதிக்குள் தீவிரமடையலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய இங்கிலாந்து பிரதமர் பிரச்சாரத்தின் போது அவர் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், பலத்த எதிர்ப்பு நிலவுகிறது.

பிரிட்டனின் பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றவுடன், விரிவான நிதியுதவித் திட்டம் எதுவுமே இல்லாமல் GBP 45 பில்லியன் மதிப்பிலான வரிக் குறைப்புகளை, செய்யும் திட்டங்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, நம்பிக்கையை குலைத்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் வேட்பாளர்களாக, ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் மற்றும் பென் வாலஸ் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News