கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது.
இத்தேர்தலில் சான்சலர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
சமூக ஜனநாயக கட்சிக்கு சில இடங்களில் ஆதரவு குறைந்துள்ளதால், இந்த தேர்தலிலும் ஏஞ்சலா மெர்கெல் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.