சீனாவின் மீன்பிடி கப்பல் இரண்டு நாட்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தின் போது, சீன கப்பலில் மொத்தம் 39 பேர் இருந்தனர். இந்தியா உட்பட பல நாடுகளிடம் சீனா உதவி கோரியுள்ள நிலையில், தற்போது இந்தியப் பெருங்கடலில் சிக்கியுள்ள இந்தக் கப்பலையும், அதில் இருக்கும் மக்களையும் காப்பாற்ற இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்தியா 39 பேரைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. மேலும் அதன் P8I விமானத்தையும் அனுப்பியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய சீனக் கப்பலின் பணியாளர்களில் சீனா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்கள் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலின்படி, இந்திய கடற்படை தனது P-8I விமானத்தை மே 17 அன்று இந்தியாவிலிருந்து சுமார் 900 கடல் மைல் தொலைவில் உள்ள தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. பாதகமான காலநிலையையும் மீறி P8I விமானங்கள் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அனைத்து வழிகளிலும் உதவி வரும் இந்தியா
மூழ்கிய கப்பலுடன் தொடர்புடைய பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய விமானம் மூலம் SAR கருவிகள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை பிரிவுகளும் SAR முயற்சிகளை அப்பகுதியில் உள்ள மற்ற பிரிவுகளுடன் ஒருங்கிணைத்துள்ளன. இந்தியாவைத் தவிர, பல நாடுகளிடமும் சீனா உதவி கோரியுள்ளது.
In a swift humanitarian action on 17 May #IndianNavy deployed its Air MR assets in the Southern IOR approx 900 Nm from India, in response to sinking of a #Chinese Fishing Vessel Lu Peng Yuan Yu 028 with 39 crew onboard. The crew incl nationals from China, Indonesia & Philippines pic.twitter.com/gbcbh8DlSc
— SpokespersonNavy (@indiannavy) May 18, 2023
மேலும் படிக்க | ராணுவ செயற்கைக்கோள் வசதியை ஆய்வு செய்த ‘மரியாதைக்குரிய அப்பா’ கிம் ஜாங் உன்
நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
சீனாவில் இரண்டு பேரின் சடலங்கள் கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சீனக் கப்பலில் இருந்த 39 பேரில் 17 பேர் சீனர்கள், 17 பேர் இந்தோனேஷியர்கள் மற்றும் 5 பேர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் என்றும் தற்போது அனைவரையும் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த விபத்து சீனாவின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின் சீன வெளியுறவு அமைச்சகம் ஆஸ்திரேலியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளில் உள்ள அதன் மிஷன் நடவடிக்கையினருக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளது.
ஜி ஜின்பிங் அளித்த உத்தரவு
இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்ததையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று CGTN ஊடகத்தை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. சீன விவசாயம் மற்றும் கிராமப்புற விவகாரங்கள் அமைச்சகம், சீன போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஷான்டாங் மாகாணம் ஆகியவற்றுக்கு அவசரகால நடவடிக்கையை உடனடியாகச் செயல்படுத்துமாறு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டார், மேலும் கூடுதல் மீட்புப் படைகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று உத்தவிட்டுள்ளதாக CGTN செய்தியை மேற்கோளிட்டு ANI செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | இளவரசி டயானா கார் விபத்தை நினைவுபடுத்திய ஹாரி-மேகனின் கார் சம்பவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ