பலூசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 4 பேர் பலி; 25பேர் காயம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் உள்ள தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர்

Last Updated : Dec 17, 2017, 05:49 PM IST
பலூசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 4 பேர் பலி; 25பேர் காயம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா பகுதியில் உள்ள பெத்தேல் கத்தோலிக்க தேவாலயத்தின் அருகில் இன்று பயங்கரவாதிகள் இருவர் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேவாலயத்தின் பிராத்தனை செய்வதற்கு அதிகமானோர் கூடியிருந்தனர். அவர்களை குறி வைத்து இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், தாக்குதல் நடத்திய ஒரு பயங்கரவாதி தேவாலயத்தின் வாசல் அருகே பாதுகாப்பு காவலர்கள் சுட்டுக் கொன்றனர். தேவாலயத்தில் நுழைந்த மற்றொரு பயங்கரவாதி தன்னை தானே குண்டி வெடிக்க செய்தார் என 
பலூசிஸ்தான் உள்துறை மந்திரி மிர் சர்ஃப்ராஜ் கூறினார்.

இந்த தாக்குதலில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்தவமனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். 

More Stories

Trending News