சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சீனா மற்றும் லாவோஸை இணைக்கும் ரயில் பாதை வெள்ளிக்கிழமை (December 03, 2021) திறக்கப்பட்டது. இந்த ரயில், சீனாவின் குன்மிங் நகரை லாவோஸ் தலைநகர் வியன்டியானுடன் இணைக்கிறது.
$6 பில்லியன் செலவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில்பாதை, 1000 கிமீ நீளமுள்ள அதிவேக ரயில் பாதையாகும்.
மெய்நிகர் விழாவில் இந்த ரயில்பாதை துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் லாவோ அதிபர் தோங்லோன் சிசோலித் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு நாடுகளும் "ஒரு புதிய வரலாற்று தொடக்க புள்ளியில்" (Historical starting point) நிற்கின்றன என்று கூறினார்.
"லாவோஸுடன் மூலோபாய தொடர்புகளை வலுப்படுத்தவும், பெல்ட் மற்றும் ரோடு முன்முயற்சியின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பிரிக்க முடியாத சீனா-லாவோஸ் (China - Laos) சமூகத்தை உருவாக்கவும் சீனா தயாராக உள்ளது" என்று சீன அதிபர் கூறினார்.
தாய்லாந்து மற்றும் மலேசியா வழியாக சிங்கப்பூர் வரை பாதையை விரிவுபடுத்த சீனா விரும்புகிறது. 70 சதவீத பங்குகளை வைத்திருக்கும் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தால் இந்த ரயில்பாதை கட்டப்பட்டுள்ளது.
Xinhua செய்தி நிறுவன அறிக்கையின்படி, இந்த பாதையில் பல்வேறு சுரங்கங்கள் மற்றும் பாலங்கள் உள்ளன. இதில் பான் லதன் மீகாங் பாலம், லுவாங் பிரபாங் மீகாங் பாலம், பான் சென் எண். 2 சுரங்கப்பாதை மற்றும் பான் நாகோக் சுரங்கப்பாதை ஆகியவை அடங்கும்.
Also Read | ஒரு போதும் சீனாவிற்கு அடிபணிய மாட்டோம்: தைவான்
இந்த திட்டம் லாவோஸுக்கு பாதகமாக இருக்கும்; வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை கடினமாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய வாஷிங்டனில் உள்ள உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் ஸ்காட் மோரிஸ், இந்த திட்டம் சீனாவுக்கு மிகவும் சாதகமான பொருளாதார வருவாயை உருவாக்கும் என்றும், ஆனால் லாவோசுக்கு என்ன பொருளாதார ஆதாயம் கிடைக்கும் என்பதை பகுப்பாய்வு செய்வது கடினம் என்று தெரிவித்தார்.
இருப்பினும், இந்த முயற்சி தென்கிழக்கு ஆசிய நாட்டை "நிலம் சூழ்ந்த நாட்டை, நிலத்துடன் இணைக்கப்பட்ட நாடாக" மாற்றும் முயற்சி என்று லாவோஸ் நாட்டின் தேசிய செய்தி நிறுவனமான KPL தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
READ ALSO | சீனா 2025-க்குள் எங்களை முழுமையாக ஆக்கிரமித்துவிடும்: பதட்டத்தில் தைவான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR