கொரோனா வைரஸை உலகிற்கு பரிசாக அளித்த சீனா (China) தனது விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. சீனாவின் சிவிஸ் ஏவியேஷன் நிர்வாகி வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதலில், விமானத்தின் போது டிஸ்போஸபிள் டயப்பர்களைப் பயன்படுத்துமாறு விமானத்தின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களும் விமானத்தின் போது பயணிகள் குளியலறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
38 பக்கங்கள் கொண்ட இந்த வழிகாட்டுதலில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்புக்குள்ளான நாடுகளுக்குச் செல்லும்போது விமான பணியாளர்கள் விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 10 லட்சத்திற்கு 500 பேர் என்ற அளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு செல்லும் போது, இந்த விதி கட்டாயம் பின்பற்ற வேண்டும். அத்தகைய நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் (America) சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமானிகள் மற்றும் துணை ஊழியர்கள் போன்ற மீதமுள்ள குழுவினர் டயப்பர்களை அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்
பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் விமான பணியாளர்கள் கண்டிப்பாக டிஸ்போஸபிள் டயப்பரை அணிய வேண்டும் என்று சீனா (China) இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, விமானத்தில் உள்ள அனைத்து குழு உறுப்பினர்களும் மாஸ்குகள், கையுறைகள் போன்ற முழுமையான பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
மேலும் அனைத்து சீன விமான நிறுவனங்களும் விமானத்தில், குவாரண்டைனுக்கான ஒரு பகுதியை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை அங்கே அமர வைக்கலாம் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, விமானத்தின் பின்புறத்தில் மூன்று இடங்களை ஒதுக்கி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இருக்கைகளை திரைச்சீலைகள் உதவியுடன் நன்கு மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விமானத்தின் காக்பிட் எனப்படும் விமானிகள் விமானத்தை செலுத்தும் அறைக்கு போகக் கூடாது எனவும், இதர விமான பணியாளர்களுக்கு உத்தரவிப்பட்டுள்ளது. விமானிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது என சீனா கூறியுள்ளது.
ALSO READ | அண்ணனை மிஞ்சும் தங்கை... தென்கொரியாவை மிரட்டும் கிம் ஜாங் உன் சகோதாரி..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR