சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில், மசூத் அசார் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என அமேரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத மசூத் அசார், பதன்கோட் உள்ளிட்ட பல தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். இவனை ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சி செய்து வந்தது. ஆனால், இதற்கு சீனா தொழில்நுட்ப ரீதியாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் மசூத் அசாருக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கை முயற்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றன. ஆனால் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இருக்கும் அமெரிக்க உட்பட 15 நாடுகளில் சீனாவை தவிர்த்து மற்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில், மசூத் அசார் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அவர் மிகவும் மோசமான நபர். மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்துக்கு சீனா தொடர்ந்து எதிராக செயல்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தை சீனா அரசு தான் விளக்கம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.