சீனா: சீனா-வை சேர்ந்த 10-வயது சிறுவனுக்கு 3D வடிவில் உறுவாக்கப்பட்ட செயற்கை தாடை பொறுத்தப்பட்டுள்ளது!
சீனாவை சேர்ந்த 10-வயது சிறுவம் பென்ங் சான்குஷான். இவருக்கு தாடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேசமுடியாமல் போனது. இப்பிரச்சணையால் கடும் அவதிப்பட்ட வந்த இவருக்கு செயற்கை முறையில் 3D இயந்திரத்தால் உறுவாக்கப்பட்ட தாடையினை பொறுத்தி மருத்துவர்கள் சாதனைப் படுத்தியுள்ளனர்.
இந்த அறுவைசிகிச்சை மூலம், உலகிலேயே முதன்முறையாக செயற்கை தாடைப் பொறுத்தப்பட்ட சிறுவன் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
3 மணி நேரம் நடைப்பெற்ற இந்த அறுவை சிகிச்சையினை சீனாவின் ஷாடோங் பல்கலை-யின் Second மறுத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையினை செய்த தலைமை மருத்துவர் லாய் குயினாக், இதற்கு முன்னதாக 3 செயற்கை தாடை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். எனினும் இந்த அறுவை சிகிச்சையே மிகவும் சிறுய வயதுடையவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையாகும்.
நேற்றைய தினம் சிறுவனுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனையில் சிறுவனால் தற்போது நன்றாக பேசமுடிகிறது எனவும், பிரச்சணைகள் ஏதும் இன்றி நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.