டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர் இவர்தான்!

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய கிரேட்டா தன்பெர்க்காவை டைம்ஸ் வார இதழின் 21019-ம் ஆண்டுக்கான சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Dec 12, 2019, 03:14 PM IST
டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர் இவர்தான்! title=

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய கிரேட்டா தன்பெர்க்காவை டைம்ஸ் வார இதழின் 21019-ம் ஆண்டுக்கான சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த நபரின் பெயரை டைம்ஸ் நாளிதழ் இன்று வெளியிட்டது. இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்(16) என்ற இளம்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கிரேட்டா தன்பெர்க் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றார். அங்கு இவர் ஆற்றிய உரை உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் பயணித்த தனது அனுபவம் குறித்து இவர் அந்த மாநாட்டில் பேசினார். 

Trending News