இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த விபத்தில் சுமார் 54 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசியா இராணுவ தலைமை கூறியுள்ளது.

Last Updated : Dec 7, 2016, 04:30 PM IST
இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

பந்தா அச்சே: இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த விபத்தில் பலி ஆனவர் எண்ணிக்கை 91 ஆகா உயிரிழந்துள்ளதாக இந்தோனேசியா இராணுவ தலைமை கூறியுள்ளது.

ரியுலியுட் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இன்று அதிகாலை தொழுகைக்காக இஸ்லாமிய மக்கள் பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள் என முல்யாடி கூறப்பட்டது. ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளனர். அந்நகரில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்துள்ளவர்கள் அதிகளவில் வந்து கொண்டுள்ளனர். பலர் அருகில் உள்ள நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

More Stories

Trending News