நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல்களில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சில நடவடிக்கைகளால் அவர் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். ஜனவரி 6 ஆம் தேதி கேபிடல் கிளர்ச்சியைத் தூண்டியதற்காக சமூக ஊடகங்களில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) புதன்கிழமை, ஒரு புதிய சமூக ஊடக தளத்துடன் ஒரு புதிய ஊடக நிறுவனத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.
டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் மற்றும் அதன் "ட்ரூத் சோஷியல்" செயலியைத் தொடங்கியதற்கான நோக்கம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போட்டியை அளிப்பதே என டிரம்ப் தெரிவித்துள்ளார். தன்னை முடக்கி தனக்கு தேசிய அளவில் உயர்வை அளிக்கவிருந்த பல தளங்களின் அணுகலை நிறுத்தியதற்காக அந்த நிற்வனங்களுக்கு எதிராக தான் ஒரு சமூக ஊடக நிறுவனத்தை தொடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ:எங்கள் அணு சக்தி ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை அழிக்க வல்லவை; மிரட்டும் புடின்..!!!
"ட்விட்டரில் தாலிபான்கள் கூட அதிக அளவில் இருக்கும் ஒரு விந்தையான உலகில் நாம் வாழ்கிறோம். ஆனால் உங்களுக்கு பிடித்தமான அமெரிக்க அதிபர் அதில் மவுனமாக்கப்பட்டார்” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். "இது ஏற்றுக்கொள்ள முடியாதது." என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
டிஜிட்டல் வேர்ல்ட் அக்விசிஷன் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது விரிவில் பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் என்றும் ஒரு வெளியீட்டில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் (Twitter) மற்றும் பேஸ்புக்கில் தடை செய்யப்பட்டதை அடுத்து, ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைத்தளத்தை தொடங்குவது பற்றி பேசி வந்தார். அவரது வலைத்தளத்தில் ஒரு வலைப்பதிவைத் தொடங்குவதற்கான முந்தைய முயற்சியும் தோல்வியுற்றது. சிலர் அதில் மோசமான பதிவுகளை இடவே அந்த முயற்சி கைவிடப்பட்டது.
டிரம்பின் இந்த செயலி அடுத்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர, அடுத்த மாத தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் பாட்காஸ்ட்களைக் கொண்ட வீடியோ ஆன் டிமாண்ட் சேவையைத் தொடங்கவும் திட்டமிடுவதாக நிறுவனம் கூறியுள்ளது.
ALSO READ: சீனாவில் மக்களை மிரட்டும் பணி நேரங்களுக்கு எதிராக 'Worker Lives Matter' பிரச்சாரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR