தீவிரவாதத்தால் அதிகமாக பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் எனறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் பல நாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 50 இஸ்லாமிய நாடுகள் பங்கு பெறும் இந்த மாநாடு தான், அமெரிக்க அதிபராக டிர்ம்ப பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் வெளிநாட்டில் நடக்கும் முதல் மாநாடாகும்.
இந்த மாநாட்டில் பேசிய டொனால்ட் டிரம்ப்:-
எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.
இந்த பேச்சின் போது அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதல், பாஸ்டன் வெடிகுண்டு தாக்குதல், ஆர்லாண்டோ தாக்குதல் ஆகியவற்றை நினைவு கூர்ந்து பேசிய டிரம்ப் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.
தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நடைபெறும் போர் என்று குறிப்பிட்ட டிர்ம்ப் அதனை மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராக பார்க்க கூடாது என்று தெரிவித்தார்.
ஆசிய நாடுகளில் இந்தியா போன்ற நாடுகளே தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று டிர்ம்ப் தெரிவித்தார்.