வலி இல்லாமல் தற்கொலை செய்ய மெஷின்; சுவிட்சர்லாந்து அரசு அனுமதி!

சுவிட்சர்லாந்தில் நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளுவதற்கான டாக்டர் டெத் என்ற காப்சியூலை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 7, 2021, 06:32 PM IST
  • பல்வேறு நாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வது என்பது தண்டைக்குரிய ஒரு குற்றமாகும்.
  • கடுமையான வேதனை, வலியுடன் உயிர் வாழ்வதற்குப் பதிலாக, தற்கொலை செய்து கொள்ள சில நாடுகள் அனுமதிக்கிறது.
வலி இல்லாமல் தற்கொலை செய்ய மெஷின்; சுவிட்சர்லாந்து அரசு அனுமதி!

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வது என்பது தண்டைக்குரிய ஒரு குற்றமாகும். இருப்பினும், சில நாடுகள் தற்கொலையை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது. தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான வேதனை, வலியுடன் உயிர் வாழ்வதற்குப் பதிலாக, தற்கொலை செய்து கொள்ள சில நாடுகள் அனுமதிக்கிறது.

கருணைக் கொலையை அங்கீகரிக்கும் நாடுகளில் ஒன்றான சுவிடசர்லாந்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் Dr.Death என்னும் எக்சிட் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தற்கொலை மெஷின் சட்டபூர்வ அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த கருவி கருணைக்கொலை விரும்புவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

1942 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் தற்கொலை சட்டப்பூர்வமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் 1300 க்கும் மேற்பட்டோர் கருணைக்கொலை செய்ய அனுமதி பெற்றுள்ளனர். கருணைக் கொலையின் ஆதரவாளர்கள் இந்த குறிப்பிட்ட தொழில் நுட்பத்திற்கு ஆதரவாக உள்ளனர்.

ALSO READ | 'மருத்துவ அதிசயம்' நின்றுபோன இதயத்தை துடிக்க வைத்த அரசு மருத்துவர்

எக்ஸிட் இன்டர்நேஷனல் (Exit International) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால்  தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு தற்கொலை சாதனத்தை எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். தற்கொலை செய்து கொண்ட பின்னர் அதை சவப்பெட்டியாகப் பயன்படுத்தி, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இந்த நூதன கண்டுபிடிப்புக்காக அந்த இயந்திரத்திற்கு 'டாக்டர் டெத்' (Dr.Death) என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இந்த டாக்டர் டெத் இயந்திரம் பற்றிய தகவல்களை அளித்த தயாரிப்பு நிறுவனம், தற்கொலை செய்து கொள்ளும் நபர் இந்த மெஷினில் உள்ளே உட்காரந்த பின்னர் அதன் ஆக்ஸிஜன் அளவு குறைக்கப்படுகிறது எனக் கூறியது. இறப்பவர் இந்த இயந்திரத்தில் அமர்ந்து கொண்ட பிறகு எந்த விதமான வலியையும், பிரச்சனையையும் உணரமாட்டார். அதில் அமர்ந்து 30 வினாடிகளுக்குள் இறந்து விடுவார்கள்.

சட்ட அங்கீகாரத்திற்குப் பிறகு, இந்த குறிப்பிட்ட இயந்திரத்தின் பயன்பாட்டை அடுத்த ஆண்டு முதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது, ​​சுவிடசர்லாந்தில் ஒரு காப்ஸ்யூல் மூலம் கருணைக்கொலை செய்யப்படுகிறது. அந்த குறிப்பிட்ட கேப்ஸ்யூல், தற்கொலை செய்து கொள்ளும் நபரை கோமா நிலையில் வைக்கிறது.

இந்த டாடர் டெத் என்னும் இயந்திரத்தை தயாரிக்க நிறுவனம் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது என்றாலும், இது கருணைக்கொலையை நாடுவோருக்கு மிகவும் உதவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த இயந்திரம் தற்கொலை வழக்குகளை ஊக்குவிக்கும் முயற்சி என்றும், இதன் மூலம் தற்கொலை செய்துகொள்ளும் மக்களின் போக்கு அதிகரிக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ | செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News