அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் HW புஷ், 94 வயதில் மரணம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் HW புஷ் தனது 94-வது வயதில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Dec 1, 2018, 11:31 AM IST
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் HW புஷ், 94 வயதில் மரணம்! title=

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் HW புஷ் தனது 94-வது வயதில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் W புஷ்-ன் தந்தையுமான இவர் மரணத்த செய்தியினை அவரது செய்திதொடர்பாளர் ஜிம் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

பனிப்போரின் முடிவில் அமெரிக்காவைத் திசைதிருப்ப உதவியதுடன், சதாம் ஹுசைனின் ஈராக் இராணுவத்தைத் தோற்கடித்த பெருமை பெற்றவர் ஜார்ஜ் HW புஷ். எனினும் புதிய வரி விதிப்பு உறுதிமொழியை உடைத்தப்பின் இரண்டாவது முறை வாய்ப்பு இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்காவின் 43-வது ஜனாதிபதி ஜார்ஜ் W புஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "ஜெப், நீல், மார்வின், டோரோ மற்றும் நான் 94 குறிப்பிடத்தக்க ஆண்டுகள் கழித்து, எங்கள் அன்பான அப்பா இறந்துவிட்டதாக அறிவிக்க வருத்தப்படுகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

ஜார்ஜ் HW புஷ் இறப்பு ஆனது அவரது மனைவி பாபா(73)-வின் மரணத்திற்குப் பிறகு சுமார் எட்டு மாதங்களுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது மனைவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் இரத்தப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 13 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News