தெருக்கடையில் அசத்தலான ஆஃபருடன் தங்க துகள் தூவிய பர்கர்!

லூதியானாவில் தெருக்களில் உணவு விற்கும் வியாபாரி ஒருவர் தான் தங்க துகள்களை பர்கரில் தூவி விற்று வருகிறார்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 29, 2021, 08:05 PM IST
தெருக்கடையில் அசத்தலான ஆஃபருடன் தங்க துகள் தூவிய பர்கர்!

பலரும் ஓய்வில்லாமல் ஓடி உழைப்பது மூன்று வேலை உணவிற்காக தான், அத்தகைய உணவுகளில் தற்போது பலரும் பல்வேறு புதுமைகளை புகுத்தி உண்ண தொடங்கி விட்டனர்.  அதற்கேற்றாற் போல ஒவ்வொரு உணவு நிறுவனங்களும், மக்களை கவரும் பொருட்டு புதுவிதமான உணவுகளை அறிமுகப்படுத்த தொடங்கிவிட்டனர்.

அதாவது விலையுயர்ந்த தங்கத்தையே உணவுகளில் கலந்து மக்களுக்கு அளிக்கும் வகையில் புதுமைகள் வளர்ந்துவிட்டது.  பிரியாணி, மோமோஸ், சூப் போன்ற பலவற்றில் தங்க துகள்களை கலந்து பெரிய அளவிலான உணவகங்களில் விற்கப்படுகிறது.  அதுவே ஒரு சிறிய கடையில் இதுபோன்று தங்க துகள் கலந்த உணவு விற்கப்படுவது ஆச்சர்யமான ஒன்று.

burger

லூதியானாவில் தெருக்களில் உணவு விற்கும் வியாபாரி ஒருவர் தான் தங்க துகள்களை பர்கரில் தூவி விற்று வருகிறார்.  அந்த பர்கரோடு சேர்த்து ஒரு அசத்தலான ஆஃபரையும் அறிவித்துள்ளார்.  அதாவது ரூ.1000-த்திற்கு விற்கப்படும் இந்த வெஜ் பர்கரை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு இவர் பரிசாக ரூ.1000-ஐ வழங்குகிறார், மேலும் சாப்பிட்ட பர்கருக்கும் காசு கொடுக்க தேவையில்லையாம்.  

அவ்வாறு சாப்பிட்டு முடிக்கவிட்டால் சாப்பிட்ட பர்கருக்கு மட்டும் காசை கொடுத்துவிட்டு வெறும் கையேடு தான் செல்ல வேண்டும்.  இவரின் இந்த அறிவிப்பால் பலரும் இவரது கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  இவர் இந்த வெஜ் பர்கரை தயாரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

 

ALSO READ உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் !

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News