அமெரிக்காவை தாக்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி 4 லட்சம் பேர் பாதிப்பு

தென்கிழக்கு அமெரிக்காவில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்க தொடங்கியுள்ளது. இதுவரை 10 மில்லியனுக்கும் மேலானோர் பாதிக்கபட்டு உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2018, 05:41 PM IST
அமெரிக்காவை தாக்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி 4 லட்சம் பேர் பாதிப்பு title=

தென்கிழக்கு அமெரிக்காவில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்க தொடங்கியுள்ளது. இதுவரை 10 மில்லியனுக்கும் மேலானோர் பாதிக்கபட்டு உள்ளனர்.

சக்திவாய்ந்த 4 புயல்கள் கரோலினா கடற்கரையோரத்தில் உள்ள மாகாணங்களின் உட்புறங்களை தாக்கி மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதில் ஒரு 1 புயலின் வேகம் குறைந்து விட்டது. எனினும், மற்ற புயல்களின் வேகம் அதிகமாக இருப்பதால், வெள்ளம் ஏற்ப்பட்டு பேரழிவு ஏற்ப்பட வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் எச்சரிக்கின்றன.

 

ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்குதலில் விபத்துக்குள்ளான ஹோட்டலில் 70 பேர் மாட்டிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

வடக்கு கரோலினா மட்டும் 3,72,000 பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களை வில்பிங்க்டன் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

 

ஃபுளோரன்ஸ் சூறாவளியால் பெரும் ஆபத்து வர உள்ளது என்பதால், அதிகமாக பாதிப்படையும் கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது. நிலச்சரிவு ஏற்ப்பட்டு சாலைகள் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Trending News