கொரோனா காரணமாக மில்லியன் கணக்கான குழந்தை தொழிலாளர்கள் உருவாகலாம்: ILO எச்சரிக்கை

உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தை தொழிலாளர்களை (Child Labour) உருவாகும் வாய்ப்பு உள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 13, 2020, 06:25 AM IST
  • கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தை தொழிலாளர்கள் உருவாகலாம்.
  • ஜூன் 12 அன்று "உலக குழந்தைத் தொழிலாளர் தினம்" கொண்டாடப்படுகிறது.
  • இருபது ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்களின் (Child Labour) எண்ணிக்கை அதிகரிப்பது இதுவே முதல் முறை.
கொரோனா காரணமாக மில்லியன் கணக்கான குழந்தை தொழிலாளர்கள் உருவாகலாம்: ILO எச்சரிக்கை title=

புது டெல்லி: உலகின் பல நாடுகளில், கோவிட் -19 தொற்றுநோய் (COVID-19) காரணமாக பல வேதனையான சம்பவங்கள் அரங்கேற உள்ளது. ஒரு பக்கம் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ், மறுபக்கம் அதன் விளைவாக கோடிக்கணக்கனோர் வேலையை இழந்துள்ளனர். இந்த வேலை இழப்பு பலரின் வாழ்வாதரத்தை பாதித்துள்ளது. குறிப்பாக குடும்ப வறுமையின் காரணமாக, குழந்தைகள் வேலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தை தொழிலாளர்களை (Child Labour) உருவாக்கும் வாய்ப்பு உள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization - ஐ.எல்.ஓ) மற்றும் யுனிசெப் (UNICEF) தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மில்லியன் கணக்கான குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாக வாய்ப்பு அதிகம் எனக் கூறியுள்ளது. கோவிட் -19 நெருக்கடியின் காரணமாக இது ஏற்படலாம் என வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

"உலக குழந்தைத் தொழிலாளர் தினத்தை (World Day Against Child Labour) முன்னிட்டு, ஜூன் 12 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. 

READ ALSO | குழந்தையின் உயிரை காக்க தனது உயிரை பணையம் வைத்த தாய்

இதன்படி, 2000 ஆம் ஆண்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.4 கோடியாகக் குறைந்துள்ளது. ஆனால் இப்போது இந்த வெற்றிபாதையில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

இது நடந்தால், இருபது ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்களின் (Child Labour) எண்ணிக்கை அதிகரிப்பது இதுவே முதல் முறை. ஏற்கனவே குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கும் குழந்தைகள் மோசமான நிலையில் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். அவர்களில் பலர் இதுபோன்ற சூழ்நிலைகளுக்குச் செல்லக்கூடும். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

குடும்பங்களுக்கு அதிக நிதி உதவி தேவைப்படும்போது, ​​அவர்கள் குழந்தைகளின் உதவியை நாடுகிறார்கள் என்று அறிக்கை கூறியுள்ளது. அதில், "பிரேசிலில், பெற்றோரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட பின்னர், குடும்பத்தை காப்பாற்ற குழந்தைகள் முன்வர வேண்டியிருந்தது" எனக் கூறப்பட்டு உள்ளது.

READ ALSO | 6 மாத EMI ஒத்திவைப்புக்கும் கூட வட்டி விதிப்பா?... 3 நாளில் முடிவெடுக்க SC உத்தரவு

உலகளாவிய தொற்றுநோயால் பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைத் தொழிலாளர்கள் (Child Labour In India) அதிகரித்துள்ளனர் என்று அது கூறியது. 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகளை தற்காலிகமாக மூடுவது ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை பாதித்துள்ளது என்று தெரிவித்தன. 

வகுப்புகள் மீண்டும் (Child School) தொடங்கும்போது கூட, சில பெற்றோர்கள் செலவுகளைச் செலுத்த முடியாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் போகலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையின்படி, அதிக குழந்தைகள் அதிக கடின உழைப்பு மற்றும் சுரண்டல் வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள். பாலின சமத்துவமின்மை மோசமடைந்து வீட்டு வேலை மற்றும் விவசாயம் செய்யும் பகுதிகளில் சிறுமிகளை சுரண்டுவது மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.

Trending News