பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு; பாம்பின் வயிற்றை கிழித்து உடலை மீட்ட உறவினர்கள்!

வனப்பகுதிக்கு ரப்பர் சேகரிக்க சென்ற 54 வயது பெண் ஒருவரை 22 அடி மலைப்பாம்பு உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் பரபரpபை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 26, 2022, 04:09 PM IST
  • மலை பாம்பு என்பது உருவத்தில் மிகப்பெரிது.
  • இரையை அப்படியே விழுங்கும் பயங்கர வலிமை கொண்டது.
  • குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு;  பாம்பின் வயிற்றை கிழித்து உடலை மீட்ட உறவினர்கள்! title=

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே மனதில் அச்சம் தோன்றுவதை எவராலும் தடுக்க முடியாது. அதிலும் மலை பாம்பு என்பது உருவத்தில் மிகப்பெரிது. அதனுடம் இரையை அப்படியே விழுங்கும் பயங்கர வலிமை கொண்டது. இந்நிலையில்,  இந்தோனேசியாவில் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று 54 வயது பெண்ணை முழுவதுமாக விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. வியாழன் மாலை தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள முனா தீவில் உள்ள தனது கிராமத்திற்கு அருகில் உள்ள தனது காய்கறி தோட்டத்தை சென்ற பாதிக்கப்பட்ட 54 வயதான வா திபா காணாமல் போனதாக கிராம தலைவர் ஃபாரிஸ் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை, அவரது குடும்பத்தினர் தோட்டத்தில் அவளைத் தேடச் சென்றனர். ஆனால் செருப்புகள் மற்றும் டார்ச்லைட் உள்ளிட்ட அவளது உடைமைகள் மட்டுமே கிடைத்தன என கிராம தலைவர் ஃபரிஸ் கூறினார்.

குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவரது உடமைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 54 அடி தூரத்தில் வயிறு வீங்கிய நிலையில் உள்ள மலைப்பாம்பைக் கண்டனர். கிராம மக்கள் பாம்பை கொன்று கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க | விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; பயத்தில் அலறிய பயணிகள்!

பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது, ​​திபாவின் உடல் இன்னும் அவளது அனைத்து ஆடைகளுடன் அப்படியே இருப்பதைக் கண்டார்கள்" என்று ஃபரிஸ் கூறினார். சில இணையதளங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில், பெண்ணின் உடலை எடுக்க, கிராம மக்கள் மலைப்பாம்பின் வயிற்றை கிழிப்பதை காணலாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தோட்டம், அவரது வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில் உள்ள குகைகள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதியில் பாம்புகள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது என்று ஃபாரிஸ் கூறினார்.

மேலும் படிக்க | Viral Video: நாகப்பாம்பு முட்டையிட்டு பார்த்திருக்கீங்களா... வியப்பில் ஆழ்த்தும் அரிய வீடியோ!

மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்குவது அல்லது கொல்வது பற்றிய செய்திகள் மிகவும் அரிதானவை. காடுகளில் அவர்கள் குரங்குகள், பன்றிகள் மற்றும் பிற பாலூட்டிகளைத்தான் மலைப்பாம்பு விழுங்கி சாப்பிடும் அறியப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தோனேசியாவில் மேற்கு சுலவேசி மாகாணத்தில் மலைப்பாம்பு ஒன்று 25 வயது இளைஞனை முழுவதுமாக விழுங்கியதை அடுத்து, இந்தோனேசியாவில் மனிதர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது மலைப்பாம்பு தாக்குதல் இதுவாகும். இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் பரவலாக இருக்கும் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள், தனது கூர்மையான வளைந்த பற்களால் தங்கள் இரையைப் பிடித்து, அதை முழுவதுமாக விழுங்குவதற்கு முன்பு கொன்று விடும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: கண்களுக்கு விருந்தாகும் பாம்புகளின் காதல் நடனம்... யாரும் பார்த்திராத அரிய காட்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News