அணு ஆயுத வல்லமை கொண்ட நாடு இறுதிவரை போரிட்டால் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை!!
ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆம் ஆண்டு பொதுச் சபை (UNGA) கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. அதில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சி, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரைக்கு இந்தியா பதிலளிக்கும் உரிமை விருப்பத்தை பயன்படுத்தும். இதில், 370 வது பிரிவை ரத்து செய்த பின்னர் காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து அவர் விமர்சித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில்; இங்கு நான் பருவநிலை மாற்றம் குறித்தே பேச துவங்குகிறேன். எனக்கு முன் பேசிய தலைவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து பேசினர். ஆனால், அதில் தீவிரத்தன்மை இல்லை என்பதை உணர்கிறேன். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. நான் ஆட்சிக்கு வந்தவுடன் இதுவரை 10 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம். பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள 100 கோடி மரக் கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் நண்பர்கள் உள்ளனர். இந்தியா செல்வது எனக்கு பிடிக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் இரு நாடுகளிடையேயான பிரச்னை, வர்த்தகம் குறித்து பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இந்தியாவிடம் தெரிவித்தேன். பாகிஸ்தான் தரப்பிலிருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் பலுசிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது.
இந்திய ராணுவம் மீது 20 வயது காஷ்மீர் இளைஞன் தாக்குதல் நடத்தினார். இதற்கு எங்கள் மீது இந்தியா குற்றம்சாட்டியது. தாக்குதலுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என இந்தியாவிடம் கேட்டோம். ஆனால், இதற்கு மாறாக தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை விட ஏழு மடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் நேரடி போர் ஏற்பட்டால் நீங்கள் சரணடைய வேண்டும் அல்லது சுதந்திரத்திற்காக சாகும் வரை போரிட வேண்டும். ஒருவேளை அணு ஆயுதம் எந்திய ஒரு நாடு சாகும் வரை போராட வேண்டுமென நினைத்தால் அது எல்லை கடந்து உலக அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா. சபை தான் காஷ்மீர் மக்கள் அவர்களது உரிமையை அவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என உத்தரவாதம் அளித்தது.
Imran Khan refers to PM Narendra Modi as Indian president in UNGA speech
Read @ANI Story | https://t.co/U9REmkk82P pic.twitter.com/rtzxTuXQFa
— ANI Digital (@ani_digital) September 27, 2019
கடந்த ஆக்.5 ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அங்கு 9 லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. மக்கள் வீட்டுச்சிறையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது உரையில் இந்தியப் பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதி மோடி என இம்ரான்கான் குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.