ஒட்டாவா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அவர்கள் சனிக்கிழமையன்று நெடுஞ்சாலை 401 இல் பயணிகள் வேனில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 3:45 மணியளவில் டிராக்டர்-டிரெய்லர் மீது மோதினர்.
5 Indian students passed away in an auto accident near Toronto on Saturday, March 13. Two others in hospital. Team of Consulate General of India in Toronto in touch with friends of the victims for assistance: Ajay Bisaria, High Commissioner of India to Canada
— ANI (@ANI) March 14, 2022
கனடாவில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். என்றத் தகவலை இந்திய ஹை கமிஷனர் அஜய் பிசாரியா இன்று (2022, மார்ச் 14 திங்கள்கிழமை) தெரிவித்தார், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் சனிக்கிழமைய்ன்ரு இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி படு காயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட அஜய் பிசாரியா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Heart-breaking tragedy in Canada: 5 Indians students passed away in an auto accident near Toronto on Saturday. Two others in hospital. Deepest condolences to the families of the victims. @IndiainToronto team in touch with friends of the victims for assistance. @MEAIndia
— Ajay Bisaria (@Ajaybis) March 14, 2022
"கனடாவில் இதயத்தை உடைக்கும் சோகம்: டொராண்டோ அருகே வாகன விபத்தில் 5 இந்திய மாணவர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ரங்கல்கள் "என கனடாவுக்கான இந்திய ஹை கமிஷனர் கூறினார்.
Quinte West Ontario Provincial Police (OPP) படி, ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகிய மாணவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
மாணவர்கள் அனைவரும் சனிக்கிழமை காலையில், நெடுஞ்சாலை 401 இல் பயணிகள் வேனில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 3:45 மணியளவில் டிராக்டர்-டிரெய்லர் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, விபத்து தொடர்பாக இதுவரை குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தயார் நிலையில் தைவான் ராணுவம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR