292 முதலைகளை கொடூரமாக கொன்று குவித்த கிராமவாசிகள்!

இந்தோனேஷியாவின் குக்கிராமம் ஒன்றில் அப்பகுதி பொதுமக்கள் சுமார் 292 முதலைகளை படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jul 16, 2018, 05:52 PM IST
292 முதலைகளை கொடூரமாக கொன்று குவித்த கிராமவாசிகள்! title=

ஜாகர்டா: இந்தோனேஷியாவின் குக்கிராமம் ஒன்றில் அப்பகுதி பொதுமக்கள் சுமார் 292 முதலைகளை படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

அப்பகுதியில் வசித்து வந்த 48-வயது முதியவர் ஒரவர் தான் வளர்கும் பிராணிகளுக்காக முதலை பன்னைக்கு அருகில் புற்களை பறிக்க சென்றுள்ளார். அப்போது பன்னையில் இருந்து வெளியே வந்த முதலை அவரை கொன்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது அங்கு கூடியிருந்த மக்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகியுள்ளது.

இதனையட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் பன்னையில் இருந்த அனைத்து முதலைகளையும் கத்தியால் குத்தி கொன்று குவித்துள்ளனர். கொல்லப்பட்ட முதலைகளின் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்... பலியான முதியவர் முதலைகள் உள்பட வன பிரானிகளை வளர்பதற்கான அனுமதி பெற்றுள்ளார் எனவும். தான் வளர்த்து வரும் பிராணிகளால் இதுவரையில் அவருக்கும், ஊர் பொது மக்களுக்கும் எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்ததில்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த சனியன்று நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகே ஊர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து பன்னையினுள் சென்று அனைத்து முதலைகளையும் கொன்றுள்ளனர். 

சம்பந்தப்பட்ட பன்னையானது முதலை சந்ததியினை வளர்பதற்காக பராமறிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் முதலைகளை பற்றி ஊர் மக்கள் தெரிவிக்கையில் "முதலைகள் கடவுளின் படைப்புகள் எனவும், அதனை அழிக்கும் உரிமை நமக்கு இல்லை" எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Trending News