பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கிகால் பறிக்கப்பட்டது. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது பாகிஸ்தான் பிரதமர் பதவி காலியாக உள்ளதால் அப்பதவிக்கான தேர்தல் நாளை (ஆகஸ்ட் 1) நடக்கவுள்ளது என பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் பதவி வேட்பாளராக, நவாஸ் ஷெரீப் தனது தம்பி ஷாபாஸ் ஷெரீப்பை அறிவித்துள்ளார்.
அவரை எதிர்த்து ஷேக் ரஷீத் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ளார். இதற்கான மனுதாக்கல் இன்று மாலை நடைபெறுகிறது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் மொத்தம் 342 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் நவாஸ்ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 188 உறுப்பினர்களை கொண்டுள்ளனர். எனவே எனவே ஷாபாஸ் ஷெரீப்காண வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஷாபாஸ் ஷெரீப் வெற்றி பெற்ற பின் 45 நாட்களுக்கு பிறகு நிலையான பிரதமர் பதவியை ஏற்பார்.