ஈராக்கில் தோல்வியை ஒப்புக்கொண்ட ஐ.எஸ்., தலைவர் பாக்தாதி

Last Updated : Mar 2, 2017, 01:44 PM IST
ஈராக்கில் தோல்வியை ஒப்புக்கொண்ட ஐ.எஸ்., தலைவர் பாக்தாதி  title=

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தோல்வியை ஒப்புக்கொண்ட அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி 

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். தங்களின் அமைப்புகளை உலகம் முழுவதும் நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஈராக்கிற்கு உதவியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் மீண்டும் ஈராக் ராணுவ வசமானது

இதனையடுத்து அங்கிருந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சிரியாவிற்குள் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி, தனது அமைப்பில் உள்ள பயங்கரவாதிகளுக்கு கடிதம் எழுதியதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் எனவும், மேலும் அரசு நாடுகளை சாராத பயங்கரவாதிகள் தங்கள் நாடுகளுக்கு தப்பி சென்று விட வேண்டும் அல்லது அவர்கள் தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

 

(With Agency inputs)

Trending News