Benjamin Netanyahu: இஸ்ரேலை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த முன்னாள் இராணுவ வீரர்

இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராக ஆட்சி புரிந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் பதவியை இழந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2021, 02:16 PM IST
  • இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 1949 ஆம் ஆண்டு ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.
  • அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்னர், 1967 இஸ்ரேலுக்குத் திரும்பினார்.
  • Unit 269 என்னும் இஸ்ரேலின் மிக முக்கிய சிறப்புப் படைகள் அமைப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்
Benjamin Netanyahu: இஸ்ரேலை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த முன்னாள் இராணுவ வீரர் title=

இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராக ஆட்சி புரிந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) ஆட்சி ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பதவியை இழந்தார். ஆனால் நாட்டின் மிகப்பெரிய கட்சியான லிகுட் கட்சியின் தலைவராக அவர் தொடர்ந்து புதிய அரசாங்கத்திற்கு சவாலாகவே இருப்பார்.

இஸ்ரேலின்  (Israel)  டெல் அவிவ் நகரில் 1949 ஆம் ஆண்டு ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். 1990 களில் இஸ்ரேலிய அரசியலில் நுழைந்த பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் மற்ற அரசியல்வாதிகளைப் போலல்லாமல் வித்தியாசமாக இருந்தார்.

அமெரிக்காவில் படித்தவர், நல்ல ஆங்கில புலமை, இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் ஈரானின் அணு ஆயுதம் ஆகியவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கடும் குரலில் எச்சரித்த நெத்தன்யாகுவின் அரசியல் திறன்களை அவரது விமர்சகர்களை கூட வாயடைக்க செய்துள்ளன.

நெத்தன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்னர், 1967 இஸ்ரேலுக்குத் திரும்பினார். இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். போர் வீரராக பயிற்சி பெற்ற அவர், Unit 269 என்னும் இஸ்ரேலின் மிக முக்கிய சிறப்புப் படைகள் அமைப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

ALSO READ | இஸ்ரேலின் புதிய பிரதமரானார் நப்தாலி பென்னட்; ஆட்சியை இழந்தார் பெஞ்சமின் நெதன்யாகு

1967-70 ஆம் ஆண்டு போரின் போது, ​​அவர் பல எல்லை தாண்டிய தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்று, அதன் மூலம் படைப்பிரிவின் தலைவராக உயர்ந்தார். போரில் பல முறை, அவர் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது பதினைந்து ஆண்டுகள் ஆட்சியில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் உட்பட ஆட்சி செய்தது பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

நெத்தன்யாகு இஸ்ரேலின் வரலாற்றில், இளைய பிரதமராகவும் மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமராக உள்ளார், நாட்டின் நிறுவனர் டேவிட் பென்-குரியன விட அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

முதன்முறையாக, அவர் 1996 இல் இஸ்ரேலின் பிரதமரானார். இஸ்ரேலின் இருபத்தேழாவது அரசாங்கத்தை (பதவி ஏற்ற தேதி: 18 ஜூன் 1996, கலைக்கப்பட்டத தேதி : 6 ஜூலை 1999) 1996 ஜூன் 18 லிக்குட் கட்சி அமைத்தது.

வலதுசாரி அரசாங்கத்திற்கு பாராளுமன்றம் அளித்த ஒப்புதல் பெற்ற பின்னர், இரண்டாவது முறையாக நெத்தன்யாகு 2009 ஆம் ஆண்டு இஸ்ரேலிய பிரதமராக பதவியேற்றார்.

1996 முதல் 1999 மற்றும் 2009-2021 வரை 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நெதன்யாகு, தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களும் காத்திருக்கின்றன.

அவருக்கு எதிரான ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் நம்பிக்கை  மீறல் ஆகியவை காரணமாக  சிறை செல்லும் வாய்ப்பு உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Trending News