கோலாளம்பூர்: மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை பற்றாக்குறையால் தவான் ராக்யாட் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது!
பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் உரையினை கேட்க யாரும் இல்லை என டத்துக் அலெக்ஸாண்டர் நந்தா லிங்க்கி தெரிவித்ததினை அடுத்து சபாநாயகர் டத்தோ முஹம்மது அர்ரிஃப் எம்.டி. யூசுப் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
செவ்வாய் அன்று மதிய உணவு இடைவேளையின் பின்னர் சுமார் 2.30 மணியளவில் கூட்டத்தொடர் மீண்டும் துவங்கிய போது அவை உறுப்பினர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அவையில் இல்லாததினை அடுத்து டத்துக் அலெக்ஸாண்டர் இந்த அவையினை ஒத்திவைக்க கோரியுள்ளார்.
இதனையடுத்து சபாயாயகர் முகம்மது அரிஃப், லிங்கியின் கருத்தினை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவையினை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். பின்னர் சட்ட ஆலோசகர்கள் அவைக்கு நுழைய அனுமதிக்க இரண்டு நிமிடங்களுக்கு மேலாக மணி ஒலிக்கசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
அவை ஆணை 13-ன் கீழ், 222 இடங்கள் கொண்ட மலேசியா பாராளுமன்றத்தில் அவையினை நடத்த குறைந்தது 26 MP-கள் இருக்க வேண்டும். ஆனால் கூட்டத்தொடர் நாள் அன்று அவையில் 35 உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். இந்நிலையில் அமைச்சர்களின் வருகையினை குறித்து வருத்தம் தெரிவிப்பதாக பிரதம மந்திரி டூன் டர் மகாதிர் முகமத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு தங்கள் வருகை பதிவுகளை மேம்படுத்த வேண்டும், அல்லது அவர்கள் வருகை புரியவில்லை என்றால் அதற்கான சரியான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பபிட்டுள்ளார்.