வீடியோ: 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜப்பானில் கடும் சூறாவளி தாக்குதல்

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 216 கி.மீ வேகத்தில் மிக சக்தி வாய்ந்த புயல் ஜப்பானை தாக்கி உள்ளது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2018, 01:53 PM IST
வீடியோ: 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜப்பானில் கடும் சூறாவளி தாக்குதல் title=

டோக்கியோ: கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 216 கி.மீ வேகத்தில் மிக சக்தி வாய்ந்த புயல் ஜப்பானை தாக்கி உள்ளது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக சக்திவாய்ந்த புயல் ஜப்பானை தாக்கியது. இன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் பிற்பகல் நேரத்திற்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி புயல் தாக்கியது. கடுமையான மழை மற்றும் காற்று தொடரும் என அந்த நாட்டின் வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இந்த புயலுக்கு ஜெபி என்று பெயரிடப்பட்டு உள்ளது.

 

கடுமையான சூறாவளி காற்று வீசுவதால் வாகனங்கள் தூக்கி தூக்கி எறியப்படுகின்றன. இதனால் விமான மற்றும் ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த ஜெபி புயலால் பல வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. 

இதுக்குறித்து ஜப்பான் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே கூறியது, ஜெபி புயலால் ஏற்ப்பட்ட பாதிப்புகளை குறித்து கவனித்து வருகிறேன். பாதிக்கப்பட்ட மக்களை சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையானா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனக் கூறினார். 

 

இன்று பிற்பகல் மேற்கு பகுதியில் "ஜெபி" சூறாவளி கரையை கடந்தது. தற்போது வடக்கு திசை நோக்கி முன்னேறியுள்ளது. வலுவான இந்த சூறாவளி விரைவில் வலுவிழக்கும் எனவும், ரியுடூ குரோரா மற்றும் அதன் மையத்திலிருந்து 162 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் எனவும் ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

1993-ஆம் ஆண்டு, இந்த ஜெபி சூறாவளி ஜப்பானை தாக்கியது கடுமையாக தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News