திங்கட்கிழமை கெடு!! நேபாள பிரதமர் ஓலியின் நாற்காலி தப்புமா? இன்றைய கட்சி கூட்டம் ரத்து

ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கே.பி. சர்மா ஓலி (KP Sharma Oli) நேபாள பிரதமராக நீடிப்பாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2020, 12:49 PM IST
திங்கட்கிழமை கெடு!! நேபாள பிரதமர் ஓலியின் நாற்காலி தப்புமா? இன்றைய கட்சி கூட்டம் ரத்து title=

காத்மாண்டு / புதுடெல்லி: நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி (Prime Minister KP Sharma Oli) பதவி விலகல் விவகாரத்தில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இன்று நடைபெறவிருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (Nepal Communist Party) கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் நிர்வாகத் தலைவர் புஷ்ப் கமல் தஹால், பிரச்சந்தா, மாதவ் குமார் உட்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருந்தனர். இதனால் இன்றைய நாள் நேபாள பிரதமர் பதவிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால் வரும் திங்களன்று, கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஓலியின் பதவி குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும். கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கே.பி. சர்மா ஓலி (KP Sharma Oli) நேபாள பிரதமராக நீடிப்பாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். .

ஆதாரங்களின்படி, பிரச்சந்தா தனது பெரும்பான்மை தலைவர்களுடன் கட்சியில் இருந்து விலக விரும்புகிறார். பிரச்சந்தா நேற்று நேபாள ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரியை சந்தித்தார். இந்த சந்திப்பு நேபாள அரசியலில் (Nepal Political) முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்தி படிக்கவும் | ஆட்டம் காணும் நேபாள பிரதமரின் பதவி, ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக இந்தியா மீது குற்றச்சாட்டு

மேலும் செய்தி படிக்கவும் | இந்திய பிரதேசங்களை உள்ளடக்கிய நேபாள வரைபடத்திற்கு அந்நாட்டு மேல்சபை ஒப்புதல்...

அதேநேரத்தில் ஓலியின் நாற்காலியை காப்பாற்றுவதில் சீனா (China) மும்முரமாக உள்ளது. நேபாளத்துக்கான சீனத் தூதரும் ஜனாதிபதியைச் சந்தித்து பேசினார். இந்தியா மற்றும் நேபாளம் (India - Nepal Relationship) இடையிலான உறவில் விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக சீனத் தூதர் இருந்துள்ளார். ஏனென்றால் இந்தியா - நேபாளம் பிரச்சனையின் போதும் நேபாள ஜனாதிபதி வித்யா தேவியை சந்தித்து பேசினார்.

ஹவு யான்கி (Hou Yanqi) சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசியா பிரிவில் பணியாற்றியுள்ளார். வெளிவிவகார அமைச்சகத்தின் ஆசியா பிரிவில் துணை இயக்குநராக இருந்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள சீனாவின் தூதரகத்திலும் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சீனா எடுக்கும் முடிவுகளில் பெரும்பகுதி இவர் பொறுப்பு வகித்துள்ளார். ஹவு யான்கி தற்போது நேபாளத்திற்கான சீன தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News