'உலகின் சிறந்த புலனாய்வு அமைப்பு' ISI தான் - பாக்., PM புகழாரம்

உலகிலேயே சிறந்த உளவுத்துறை என்றால் அது ISI என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரவித்துள்ளார்..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2018, 10:59 AM IST
'உலகின் சிறந்த புலனாய்வு அமைப்பு' ISI தான் - பாக்., PM புகழாரம் title=

உலகிலேயே சிறந்த உளவுத்துறை என்றால் அது ISI என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரவித்துள்ளார்..! 

பாகிஸ்தானின் ISI அமைப்பின் அலுவலகத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது அமைச்சர்களுடன் பார்வையிட்டார். அப்போது ISI அதிகாரிகள் பிரதமரிடம் அவர்களது பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர்.

இதனையடுத்து ISI வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் பிரதமர் ISI தேசப்பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டியுள்ளார், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் ISI-யின் பாராட்டுக்குரிய செயல்களை பற்றி அவர் பேசினார். மேலும் ISI தான் நம் நாட்டின் முதல்வரிசை பாதுகாப்பும் ஆகும். உலகிலேயே தலைசிறந்த உளத்துறை ISI ” என்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக இம்ரான் கான் அந்நாட்டு ராணுவத்தின் பினாமி என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Trending News