#Article370: இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை!

இந்தியா - பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, ரத்து செய்வதாக, பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது!

Last Updated : Aug 9, 2019, 11:42 AM IST
#Article370: இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை! title=

இந்தியா - பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, ரத்து செய்வதாக, பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியா ஒருதலைபட்சமாகவும் நடந்துள்ளது என பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக இருதரப்பு உறவை குறைக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த வகையல் இந்திய விமானங்கள் பயணிக்கும் வான் வழியை முடக்கியது. இதன் தொடர்ச்சியாக புதுடெல்லியில் இருந்து லாகூர் வரை, வாரம் இருமுறை இயங்கி வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வாகா எல்லையில், நேற்று ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா அங்கிருந்து ரயிலை அட்டாரிக்கு தனி என்ஜின் மூலம் அழைத்து வந்தது. 

முன்னதாக வான் வழி போக்குவரத்து தடைப்பட்டதால் இந்தியாவில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும், 'ஏர் - இந்தியா' விமானங்கள், 12 நிமிடங்கள் கூடுதலாக பயணிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், 'இந்திய விமானங்களுக்கான வான்வெளியை மூடவும் இல்லை; அவற்றை வேறு பாதைக்கு திருப்பிவிடவும் இல்லை' என, பாகிஸ்தான் அரசு நேற்று திடீரென மறுப்பு தெரிவித்தது. இந்திய விமானங்களுக்கு, பாகிஸ்தான் வான்வெளியில் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்துள்ளது. இதனால், வாகா எல்லை வழியாக, இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய, தெற்காசிய நாடான ஆப்கனுக்கு, பாகிஸ்தான் அனுமதி மறுத்து உள்ளது. இத்துடன் பாகிஸ்தான் உள்ள தியேட்டர்களில், இந்திய சினிமாக்களை திரையிடவும், நேற்று திடீர் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Trending News