சீன செயலியான TikTok-ஐ தடை செய்தது Pakistan: தடை நீடிக்குமா? தடம் மாறுமா?

TikTok, செயலியில் போஸ்ட் செய்யப்படும் உள்ளீடுகளை மாற்றுவது குறித்து பேச தயாராக இருந்தால், பி.டி.ஏ அது குறித்த தன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என கூறப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2020, 09:02 PM IST
  • சீன செயலியான TikTok-க்கு பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
  • சீனாவின் ByteDance-க்குச் சொந்தமான இந்த செயலி பாக்கிஸ்தானில் கிட்டத்தட்ட 39 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கிற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டிலிருந்து அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாவது செயலி இதுவாகும்.
சீன செயலியான TikTok-ஐ தடை செய்தது Pakistan: தடை நீடிக்குமா? தடம் மாறுமா? title=

பாக்கிஸ்தானிய ஊடகமான டான் செய்தி வெளியிட்டுள்ள செய்தியின் படி, "சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து ஏராளமான புகார்கள்" வந்ததை அடுத்து, மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு சீன செயலியான TikTok-க்கு பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

பாகிஸ்தான் (Pakistan) தொலைத்தொடர்பு ஆணையம் (PTA) தடை விதிக்க அறிவுறுத்தல்களை வெளியிட்டது என்று டான் கூறியது. செயலியில் பகிரப்பட்ட "ஒழுக்கக்கேடான / அநாகரீக உள்ளடக்கத்திற்கு எதிராக" பல புகார்கள் எழுப்பப்பட்டதாக ஒழுங்குமுறை அமைப்பு கூறியது.

முன்னதாக TikTok-க்கு ஒரு இறுதி அறிவிப்பை வெளியிட்டதாக பி.டி.ஏ கூறியது. அந்த அறிவிப்பில், சட்டவிரோத ஆன்லைன் உள்ளடக்கத்தை நல்ல விதத்தில் நிர்வகிப்பதற்கான ஒரு பயனுள்ள செயல்முறையை உருவாக்குவதற்கான வழிமுறைகளுக்கு பதிலளிப்பதற்கும் இணங்குவதற்கும் கணிசமான நேரம் அளிக்கப்பட்டதாக டான் கூறியது. இருப்பினும், நிறுவனம் பி.டி.ஏ-வின் அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக இணங்கத் தவறிவிட்டதால், அதன் பின்னர் அதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.

ALSO READ: சீனாவில் அராஜகம்: உண்மை பேச எண்ணிய உள்ளம் விலையாகக் கொடுத்தது தன் உயிரை!!

அறிக்கையின்படி, TikTok செயலியில் போஸ்ட் செய்யப்படும் உள்ளீடுகளை மாற்றுவது குறித்து பேச தயாராக இருந்தால், பி.டி.ஏ அது குறித்த தன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்பு குறித்து TikTok இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் (Benazir Bhutto) மகள் பக்தவர் பூட்டோ-சர்தாரி, "ஒழுக்கக்கேடான உள்ளடக்கம் TikTok-க்கில் இல்லை, அது நமது சமூகத்தில்தான் பொதிந்துள்ளது" என்று கூறி இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார். ஒரு ட்வீட்டில், "ஒழுக்கக்கேடான உள்ளடக்கம் டிக்டோக்கில் இல்லை, அது நமது சமூகத்தில்தான் பொதிந்துள்ளது, இங்கு பெண்கள் யோகா பேண்ட்களை தொலைக்காட்சியில் அணியவோ அல்லது இரவில் வாகனம் ஓட்டவோ முடியாது, குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறார்கள். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மதராசாக்களில், திறந்த பொது இடங்களில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். TikTok-ல் பிரச்சனை இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவின் ByteDance-க்குச் சொந்தமான இந்த செயலி பாக்கிஸ்தானில் கிட்டத்தட்ட 39 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கிற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டிலிருந்து அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாவது செயலி இதுவாகும். ஜூலை மாதம், பி.டி.ஏ தனது தளத்தில் இருந்து ஆபாச மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கத்தை அகற்ற TikTok-க்கு இறுதி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டதாக டான் தெரிவித்துள்ளது.

எனினும், சீனாவின் (China) கை பொம்மையாக பாகிஸ்தான் இருப்பதை கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த தடை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது. இருக்கும் ஒரே நண்பனை பகைத்துக் கொள்ள பாகிஸ்தான் துணியுமா?

ALSO READ: ‘Get lost’ என்று கூறி, இந்திய ஊடகங்களுக்கு போதித்த சீனாவுக்கு பதிலளித்த Taiwan

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News