பிரபல நடிகர்களின் மூதாதையர் வீடுகளை வாங்கும் பாகிஸ்தான் அரசின் நோக்கம் என்ன?

பிரபல நடிகர்களின் மூதாதையர் வீடுகளை வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தி திரையுலகில் கோலோச்சி, உலகமெங்கும் தங்கள் நடிப்புத் திறமையால் பிரபலமான நடிகர்களான ராஜ் கபூர் மற்றும் திலீப் குமாரின் மூதாதையர் வீடுகளை வாங்க பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 04:48 PM IST
  • பெஷாவரில் சுமார் 1,800 வரலாற்று கட்டமைப்புகள் உள்ளன, அவை 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
  • கபூர் ஹவேலியின் உரிமையாளர் அலி காதர், 200 கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திற்கு தனது சொத்தை விற்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
  • தற்போது தொல்பொருள் துறை, கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள இரண்டு கட்டடங்களை வாங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.
பிரபல நடிகர்களின் மூதாதையர் வீடுகளை வாங்கும் பாகிஸ்தான் அரசின் நோக்கம் என்ன? title=

புதுடெல்லி: பிரபல நடிகர்களின் மூதாதையர் வீடுகளை வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தி திரையுலகில் கோலோச்சி, உலகமெங்கும் தங்கள் நடிப்புத் திறமையால் பிரபலமான நடிகர்களான ராஜ் கபூர் மற்றும் திலீப் குமாரின் மூதாதையர் வீடுகளை வாங்க பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வாவில் உள்ள மாகாண அரசு, பாழடைந்த நிலையில் உள்ள ராஜ்குமார் மற்றும் திலீப் குமாரின் வீடுகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இவை மிகவும் சிதலமடைந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று கூறப்படுகிறது.

கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தொல்பொருள் துறை, இரு நடிகர்களின் மூதாதையர் சொத்தான இந்த இரு கட்டடங்களையும் வாங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளது. அவை பெஷாவர் நகரின் மையத்தில் அமைந்துள்ளன என்றும் தேசிய பாரம்பரிய சின்னங்களாக  அறிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விஷயம் தொடர்பாக பெஷாவர் நகர துணை கமிஷனருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களின் விலையை தீர்மானிக்கப் போகிறது பாகிஸ்தான் அரசு. இந்திய சினிமாவின் மாமனிதர்கள் இருவரும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு இங்கு தன் பிறந்து வளர்ந்தார்கள்.  

ராஜ் கபூரின் மூதாதையர் வீடு, கபூர் ஹவேலி என்று அழைக்கப்படுகிறது, இது fabled Qissa Khwani Bazar என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த வீடு 1918 மற்றும் 1922 க்கு இடையில் ராஜ் கபூரின் தாத்தா திவான் பஷேஸ்வர்நாத் கபூரால் (Dewan Basheswarnath Kapoor) கட்டப்பட்டது. ராஜ் கபூரும் அவரது மாமா திரிலோக் கபூரும் இந்த வீட்டில் பிறந்தவர்கள். மாகாண அரசு ஏற்கனவே இந்த வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.  

பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் 100 ஆண்டுகளுக்கும் மேலான மூதாதையர் வீடும் இதே பகுதியில் அமைந்துள்ளது. சிதைந்த நிலையில் காணப்படும் இந்த வீடு, 2014 ஆம் ஆண்டில் அப்போதைய நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Read Also | அதிரடி நாயகன் வட கொரிய அதிபர் Kim Jong Un உலகிற்கு கொடுத்த மற்றொரு ஷாக்..!!!

கடந்த காலங்களில் இந்த கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கு வணிக வளாகங்களை கட்டலாம் என இரண்டு கட்டடங்களின் உரிமையாளர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள் துறை, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் முட்டுக்கட்டைப் போட்டது.

கபூர் ஹவேலியின் உரிமையாளர் அலி காதர், கட்டிடத்தை இடிக்க விரும்பவில்லை என்றும், தேசியப் பெருமைக்குரிய இந்த வரலாற்று கட்டமைப்பைப் பாதுகாக்க தொல்பொருள் துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கைகள் எடுத்தார்.  

200 கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திற்கு தனது சொத்தை விற்க அலி காதர் பேசியுள்ளார். ராஜ் கபூரின் குடும்பத்தின் வாரிசும், பிரபல நடிகருமான ரிஷி கபூர் இந்த ஆண்டு மும்பையில் இறந்தார். 2018ஆம் ஆண்டில் அவரது வேண்டுகோளுக்கு இணங்க, கபூர் ஹவேலியை அருங்காட்சியகமாக மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான நிலையில் இதுவரை அது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.  

பெஷாவரில் சுமார் 1,800 வரலாற்று கட்டமைப்புகள் உள்ளன, அவை 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. தற்போது தொல்பொருள் துறை, கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள இரண்டு கட்டடங்களை வாங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. 

Read Also | சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்.. Donald Trump மீண்டும் முடிசூட்டிக் கொள்வாரா..!!!

Trending News