தன் வினை தன்னை சுடும்.... பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானை விட அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில், பயங்கரவாத சம்பவங்களில் ஏராளமான ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை நிலைகுலைய செய்யும் முயற்சியில், அந்த நாடு கையாண்ட உத்தி, இன்று அதற்கு சுமையாக மாறி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2023, 03:49 PM IST
  • BLA கடந்த ஒரு வருடத்தில், ஒன்பது மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது.
  • தீவிரவாதத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள இரண்டாவது நாடு பாகிஸ்தான்.
  • பாகிஸ்தானில் 120 சதவீதம் அதிகமான பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தன் வினை தன்னை சுடும்.... பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்! title=

பாகிஸ்தான், இந்தியாவை தாக்குவதற்கும், இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வளர்த்து வந்தது. இப்போது, பாம்பிற்கு பால் வார்த்த கதையாக, பாகிஸ்தான் பயங்கரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ள பயங்கரவாதக் குறியீடு அறிக்கையில் பாகிஸ்தானின் உண்மை நிலை தெரியவந்துள்ளது. தெற்காசியாவில் அதிகபட்ச பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் இறப்புகளின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை முந்தியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, பயங்கரவாதம் என்ற அரக்கன் இப்போது அதிகபட்ச சேதத்தை ஆப்கானிஸ்தானுக்கு அல்ல, பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து கொல்லப்படும் ராணுவ வீரர்கள்

பாகிஸ்தானில் 120 சதவீதம் அதிகமான பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தீவிரவாத விவகாரத்தில் ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தான் முந்திவிட்டது. தீவிரவாதத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள இரண்டாவது நாடு பாகிஸ்தான் என்று உலக பயங்கரவாதக் குறியீட்டில் கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள், இங்கு பயங்கரவாத சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 643 ஐ எட்டியுள்ளது. பலியானவர்களில் 55 சதவீதம் பேர் ராணுவத்துடன் தொடர்புடையவர்கள்.

அதிகரிக்கும் தீவிரவாத சம்பவங்கள்

தீவிரவாத சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக குறியீட்டில் பாகிஸ்தான் ஆறாவது இடத்திற்கு வந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அமைப்பு வெளியிட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் (BLA) தாக்குதலால், நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்பாகும். பாகிஸ்தானில் ஒரு வருடத்திற்குள் பயங்கரவாத தாக்குதல்களில் 36 சதவீத இறப்புகளுக்கு BLA பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பலுசிஸ்தானில் ஒரு ‘புல்வாமா’ தாக்குதல்! 9 போலீசார் படுகொலை! 13 பேர் படுகாயம்!

TTP அமைப்பை விட BLA மிகவும் ஆபத்தானது

BLA கடந்த ஒரு வருடத்தில், ஒன்பது மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது. BLA இப்போது பாகிஸ்தானின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபானை (TTP) முந்தி விட்டது. 2022 ஆம் ஆண்டு BLA அமைப்பு அதிகபட்ச தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஆண்டு ஒரு தாக்குதலில் சராசரியாக சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு தாக்குதலுக்கு கிட்டத்த்ட்ட ஒருவர் என்ற அளவில் இருந்தது. 2022 ஆம் ஆண்டில், BLA சம்பந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 233 பேர் இறந்தனர், அதில் 95 சதவீதம் பேர் இராணுவ வீரர்கள். BLA, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ளது. இது பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்காக போராடும் ஒரு அமைப்பாகும்.

அமெரிக்கா விதித்துள்ள தடை 

பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்றும் BLA மற்றும் TTP இரண்டையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளன. 2022 ஆம் ஆண்டில், BLA மிகக் கொடிய தாக்குதலை நடத்தியதாக அறிக்கை கூறுகிறது. பாகிஸ்தானில் உள்ள எல்லைப் படையினருக்கான இரு வெவ்வேறு பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கடுமையாக துப்பாக்கியால் சுட்டனர். யாரும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் தாக்குதலுக்கு பொறுப்பேற்று, BLA தனது இரண்டு தாக்குதல்களிலும் 195 வீரர்கள் இறந்ததாகக் கூறியது.

மேலும் படிக்க | அதிகரிக்கும் நெருக்கடி... குறைந்தபட்ச கடனாவது தாங்க... கையேந்தும் பாகிஸ்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News