பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை திங்கள்கிழமை மாலை 3:45 மணிக்கு (IST) சந்திக்க உள்ளார், பிரான்சின் பியாரிட்ஸில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த சந்திப்பு மாலை 4:30 மணி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2019-ஆம் ஆண்டில் இரு தலைவர்களுக்கிடையேயான இரண்டாவது சந்திப்பாகும், இது ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டின் ஓரத்தில் சந்தித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இந்தியா-பாகிஸ்தான் நிலைமை பிரதமர் மோடி டிரம்பை சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., "பிராந்திய பதட்டங்களைக் குறைப்பதற்கும் காஷ்மீரில் மனித உரிமைகள் மீதான மரியாதையை நிலைநிறுத்துவதற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடமிருந்து கேட்க விரும்புவார்" என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விஷயத்தில் மூன்று முறை மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்துள்ளார், இது இந்தியாவை எரிச்சலூட்டி நிலையில், இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் சிம்லா மற்றும் லாகூர் ஒப்பந்தங்களை பின்பற்றுகின்றன என்பதை தெளிவுபடத்த முன்வந்தது. இந்நிலையில் தற்போது நிகழவுள்ள இச்சந்திப்பு இரு நாட்டு உறுவுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஆப்கானிய சமாதான முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்கு பின்னர் இந்தியா அழைக்கப்பட்டுள்ளது, கடைசியாக 2005-ல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை க்ளெனீகல்ஸ் உச்சி மாநாட்டில் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.