முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம் - டிரம்ப்பை எச்சரிக்கும் காசிம் சுலைமானின் மகள்

பைத்தியகார டிரம்ப், எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். மரணத்தில் நாட்களைக் கழிப்பீர்கள்" என எச்சரிக்கை செய்த கொல்லப்பட்ட காசிம் சுலைமானின் மகள் ஜீனாப்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2020, 04:00 AM IST
முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம் - டிரம்ப்பை எச்சரிக்கும் காசிம் சுலைமானின் மகள் title=

புது டெல்லி: கடந்த 3 ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய விமான தாக்குதலில் ஈரான் ( ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி (Qasem Soleimani) கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்தது. மேலும் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் காசிம் சுலேமானிக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் மக்கள் சாலையில் கூடியிருந்தனர். அவர்களின் கையில் சுலைமானியின் படங்கள் இருந்தன. பாக்தாத்தின் தெருக்களில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற காசிம் சுலைமானி மகள் ஜீனாப் (Zeinab Soleimani), "காத்திருங்கள்.. அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் மரணத்தில் நாட்களைக் கழிப்பார்கள்" என்று சத்தியம் செய்தார்.

"டிரம்ப் ஒரு பைத்தியம்", என் தந்தையின் தியாகத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்" என்று ஜீனாப் சுலைமானி மாநில தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய உரையில் கூறினார். 

"டிரம்பைக் கொல்வது கூட போதுமான பழிவாங்கல் அல்ல, தியாகி சுலைமானியின் இரத்தத்திற்கு செலுத்தக்கூடிய ஒரே விஷயம் அமெரிக்காவை இப்பகுதியில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றுவதாகும்" என்று புரட்சிகர காவல்படை வான்வெளி படைத் தலைவர் அமிராலி ஹாஜிசாதே (Amirali Hajizadeh) ஈரானிய ஊடகங்களிடம் கூறினார்.

காசிம் சுலைமானி (Qasem Soleimani) இறுதி சடங்கில், "அமெரிக்காவுக்கு மரணம்" என்று கூட்டம் கோஷமிட்டது. ஈரானிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், "ஒரு கடுமையான பழிவாங்கலை நாடுவது எங்கள் உரிமை" என்று ஒருவர் சுவரொட்டி வைத்திருந்தார். 

ஈரானின் மிக உயர்ந்த மதத் தலைவரான அயதுல்லா கமேனிக்குப் பிறகு, இரண்டாவது மிக சக்திவாய்ந்தவரா வலம் வந்த ஜெனரல் காசிம் சுலைமானியின் இறுதிச் சடங்கில் ஈடுபட்ட மக்கள் கறுப்பு உடைகளை அணிந்து கொடிகளை தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். பல சக்திவாய்ந்த பெரிய தலைவர்களும் ஈரானின் மக்களும் இந்த ஊர்வலத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump), நாங்கள் எடுத்த நடவடிக்கை ஒரு போரைத் தொடங்குவதற்கு அல்ல, ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்றார். ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுலைமானி கொல்லப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் சதியில் சுலைமானி ஈடுபட்டதாகவும் கூறினார். அமெரிக்க தூதர்கள் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்க சுலைமணி சதி செய்ததாகவும், இந்தியா மற்றும் லண்டனில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் காசிம் சுலேமானியிடமிருந்தும் உதவி பெறுகிறார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News