இரு நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தத்திற்காக, ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தலைமையில் மாஸ்கோவில் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆர்மீனியா, அஜர்பைஜான் இரு நாடுகளும் போர் கைதிகளை விடுவிக்க வேண்டும், மேலும் இரு தரப்பினரும் இறந்தவர்களின் உடல்களை பரஸ்பரம் ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. செப்டம்பர் 27 அன்று தொடங்கிய சண்டையின் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர்.
மாஸ்கோ பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் ராஜீய நிலையிலான தொடர்பு ஆகும். பிரச்சனைக்கு காரணமான நாகோர்னோ-கர்பாக் மலை பகுதி அஜர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் இப்பகுதியில் அர்மீனியாவை சேர்ந்த மக்கள் அதிகம் இருப்பதால், இப்பகுதி ஆர்மீனியர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
நாகோர்னோ-கர்பாக் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. ஆர்மீனியாவில் உள்ள ஒரு பகுதியை அஜர்பைஜான் தாக்கியதாக ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
ALSO READ | எங்கள் நாட்டில், கொரோனா இல்லை.. இல்லவே இல்லை : Kim Jong Un
ஆர்மீனியாவை சேர்ந்த ஒரு பகுதியை அஜர்பைஜான் தாக்கியதாக ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது, அதே நேரத்தில் கராபாக்கில் உள்ள ஆர்மீனிய பாதுகாப்புப் படையினர், உடன்படிக்கைக்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அஜர்பைஜான் படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள் என குற்றம் சாட்டியுள்ளது
மறுபுறம், அஜர்பைஜான் பிராந்தியத்தில் ஆர்மீனிய இராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக அஜர்பைஜான் கூறியுள்ளது, இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், ரஷ்ய செய்தி நிறுவனத்துடன் பேசியபோது, ஒரு அரசியல் தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் சண்டை தொடரும் சூழ்நிலைகள் நிலவுவதாகவும் கூறினார். 'பேச்சு வார்த்தை முடியும் வரை நாங்கள் பொறுமையாக இருப்போம், பின்னர் எங்களுக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை செய்வோம்’ என எச்சரித்துள்ளார்
ALSO READ | மலிவான விலையில் தங்கத்தை வாங்கும் பொன்னான வாய்ப்பை வழங்கும் மத்திய அரசு..!!!
மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சர் ஜெஹுன் பைரமோவ் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க அனைத்து ராஜீய வழிகளையும் பயன்படுத்துவதாக ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், அஜர்பைஜான் இந்த ஒப்பந்தத்தின் போர்வையில் இரண்டாவது போருக்கு தயாராகி வருகிறது என அர்மீனியா குற்றம் சாட்டியுள்ளது.
10 மணி நேர பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஒரு அறிக்கையில், போர்நிறுத்தம் மனிதாபிமான அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறினார். இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரஸ்பரம் ஒப்படைப்பது மற்றும் ஒரே நேரத்தில் கைதிகளை விடுவிப்பது குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் குழு பேசியது. ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானும் இதற்கு உடன்பட்டன. இக்குழுவுக்கு பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமை தாங்கின. அதே நேரத்தில், இந்த பேச்சு வார்த்தையில் துருக்கியையும் சேர்க்க வேண்டும் என அஜர்பைஜான் கூறியுள்ளது.
ALSO READ | சும்மா எங்களையே குற்றம் சொல்லாதீங்க.. நாங்க தான் முதலில் சொன்னோம்: புலம்பும் சீனா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe