புதுடெல்லி: கடந்த ஆண்டு, சீனாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது என்றும் நாங்கள் தான் இது குறித்த தகவலை வெளியிட்டோம் என சீனா வெள்ளிக்கிழமை கூறியது. சீன நகரமான வுஹானில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவியது என்றும் முன்னதாக வெளவால்கள் அல்லது எறும்பு தின்னிகளிடமிருந்து கொடிய வைரஸ் பரவியது என்ற கூறப்பட்டு வந்த நிலையில், சீனா இதை தெரிவித்துள்ளது.
ஒரு மாநாட்டில் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், “கொரோனா வைரஸ் ஒரு புதிய வகையான வைரஸ், தகவல்கள் வெளிவருவதை தொடர்ந்து, மேலும் மேலும் உண்மைகள் வெளிவருகின்றன, கடந்த வருட இறுதியில் உலகின் பல்வேறு இடங்களில் தொற்றுநோய் பரவியதை நாம் அனைவரும் அறிவோம் சென்ற ஆண்டு, சீனா முதன்முதலில் வைரஸ் பரவல் தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டு, நோய்க்கிருமியை அடையாளம் கண்டு, மரபணு தொடர்பான தகவலையும் உலகத்துடன் பகிர்ந்து கொண்டது” என்றார்.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கொரோனா தொடர்பான தகவல்களை மறைத்ததாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஹுவாவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலைமையை மூடி மறைத்ததால், கொரோனா வைரஸ் நெருக்கடி மிகவும் அதிகரித்தது என செவ்வாயன்று டோக்கியோவில் நடந்த அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் QUAD அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பாம்பியோ கூறினார்.
ALSO READ COVID-19 Update: புதிய பாதிப்புகள் 73,272; மொத்த பாதிப்புகள் சுமார் 70 லட்சம்
தொற்று பாதிப்பிலிருந்து குணமடையும் விகிதம் 85.52 சதவீதமாக உள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.54 சதவீதமாக உள்ளது.
நோய்த்தொற்றின் முதல் பாதிப்பு வந்தபின், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சீனா, பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளது. வுஹானில் உள்ள ஒரு பயோ-லேபில் இருந்து COVID-19 வெளிவந்தது என்றும் அமெரிக்கா கூறியது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பிடியில் உலக நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. இந்த தொற்று உலகில் 3 1/2 கோடிக்கும் அதிகமான மக்களை தொற்றியுள்ளது மற்றும் உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கு அதிகமானவர்களைக் கொன்றது.
சுமார் 76 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. மேலும் அமெரிக்காவில், 2,12,000 க்கும் அதிகமானோர் இறந்து விட்டனர்.
COVID-19 காரணமாக சீனாவில் 90,736 பேர் பாதிக்கப்பட்டனர். 4,739 பேர் இறந்து விட்டதாக அந்நாடு கூறுகிறது.
ALSO READ | கொரோனா வைரஸ் கவலைகளுக்கு மத்தியில் ராணுவ அணிவகுப்பை நடத்தும் வடகொரியா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe